மீலாது நபி நன்னாளில் அன்பை விதைப்போம்! அன்பையே பல மடங்காய் அறுவடை செய்வோம் – அபூபக்கர்

மீலாது நபி வாழ்த்துச் செய்தி!

இறைத்தூதராக இந்த மண்ணில் அவதரித்த நபிகள் நாயகம் பிறந்த மாபெரும் நன்னாள் இது. இந்த நாளில் அமைதியும் சமாதானமும் இந்த உலகில் தழைத்தோங்க வேண்டும் என்பதே அவரது உயர்ந்த நோக்கம். அதை நோக்கி பயணிக்கிர வகையில் சாதி,மத, இன, மொழிகளை கடந்து அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வோடு நாம் பயணிக்க வேண்டும்

அன்பே இந்த உலகில் மிக உயர்ந்த ஆயுதம் என்பதே எல்லா மதங்களும் உலகிற்குச் சொல்லும் ஒப்பற்ற ஒரே வாக்கியம். இதையே இறைத்தூதர் நபிகள் நாயகம் தன் முழுமுதற் கடமையாய் கொண்டு வாழ்ந்தவர்.

வேற்றுமைகளை மறந்து ஒற்றுமை உணர்வோடு நாம் அனைவரும் பயணிக்க வேண்டும். உலக அரங்கில் இந்திய தேசம் தலைநிமிர்ந்து நிற்பதற்கு வல்லரசாய் மாறுவதற்கு ஒற்றுமையே பலம் என்பதை மனதில் நிறுத்த வேண்டிய தருணம் இது.

கருத்து வேறுபாடுகளைத் களைந்து பரந்துபட்ட உணர்வோடு ஒன்றே குலம் ஒருவனே தேவன், அனைவரும் ஒரு தாய் மக்கள் என்பதை நெஞ்சில் நிலைநிறுத்தி பயணிப்போம். கொரோனா எனும் பேரிடர் காலத்தில் வாழ்க்கையை நகர்த்தும் நம் அனைவருக்கும் நாளை என்பது நம்பிக்கைக்குரியதாய் இல்லை. எனவே இன்று மட்டுமே நம் கைகளில் உள்ளது. இந்த நாளில் அன்பை விதைப்போம்! அன்பையே பல மடங்காய் அறுவடை செய்வோம் என்பதை உறுதி பூணுவோம்!!

அனைவருக்கும் இந்திய ஹஜ் அசோசியேஷன் சார்பில் மனமார்ந்த மீலாது நபி வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
தலைவர்,
பிரசிடெண்ட் அபுபக்கர்,
இந்திய ஹஜ் அசோஷியேஷன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *