இந்த காலத்து ஜெமினி கணேசன் தான் அஷோக் செல்வன் – தயாரிப்பாளர் T சிவா புகழாரம்

இயக்குநர் வெங்கட் பிரபு ‘மாநாடு’ என்ற திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, அடுத்ததாக நடிகர் அசோக் செல்வனை வைத்து ‘மன்மத லீலை’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில், சம்யுக்தா ஹெக்டே, ஸ்ம்ருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்த மணிவண்ணன், இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார். ‘மன்மதலீலை‘ திரைப்படம் “மிகவும் நகைச்சுவையாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும். திருமணத்துக்கு பிந்தைய காதலைச் சுற்றி நடக்கும் கதையைக் கண்ட ஜாலியான படம்.

‘A’ சான்றிதழ் பெற்ற இந்த படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ 1 மாதத்திற்கு வெளியாகி இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இன்றைய தினம் (21 மார்ச்) இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில்,

அம்மா T சிவா பேசியதாவது,

கடந்த 3 ஆண்டுகளாக நாங்கள் நடிகர் சங்கம் இல்லாமல் மிகவும் அவதிக்குள்ளானோம், ஆனால் திரு.பூச்சி முருகன் அவர்களின் முயற்சியால் நேற்றைய தினம் ‘விஷால் & டீம்’ வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியான தருணம்.

முதல் கட்டமாக நடிகர் சங்கம் கட்டிடத்தை கட்டுவதற்கு இந்த விழாவின் மூலமாக ரூபாய் 5 லட்சத்தை பூச்சி முருகனிடம் ஒப்படைத்தார்.

மன்மதலீலை படத்தை பற்றி அவர் பேசியபோது, இந்த படத்தில் அஷோக் செல்வன் நடிக்கவில்லை அவர் வாழ்ந்துள்ளார், ட்ரைலரில் வரும் கடைசி காட்சியின் நடிப்பை யாராலும் நடிக்க முடியாது ‘முன் அனுபவம் உள்ளவரால் மட்டும் தான் அதை வெளிப்படுத்த முடியும்’ அஷோக் செல்வனுக்கு முன் அனுபவம் உள்ளது என நினைக்கிறன் இந்த காலத்து ‘ஜெமினி கணேசன்’ தான் அஷோக் செல்வன். அனைவரும் குழந்தைகளை தவிர்த்து திரையரங்கில் வந்து சிரித்து பார்க்க கூடிய படம் இது. என்றார்.

அஷோக் செல்வன் பேசியபோது,

2007ல் இருந்து நான் பேச ஆசைப்படுகிறேன், எனது படிப்பை முடித்து விட்டு, நண்பர்களை பிரியும் தருணத்தில் எனது நண்பர்களுடன் ‘சென்னை-28’, அந்த படத்தின் மூலம் எனக்கு வெங்கட் பிரபு மீது ஒரு எமோஷனல் கனெக்ட் இருந்தது. இன்று அவருடன் சேர்த்து ஒரு படம் பண்ணியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

முதல் ஊரடங்கு முடிந்தவுடன் இந்த படத்தை துவங்கினோம், அப்போது எனக்கு கொரோனா தோற்று இருந்தது, அப்போது தான் முத்த காட்சிகளை எடுத்தோம் ஆனாலும் எந்த ஹீரோயின்களுக்கும் பாதிப்பு இல்லை. ‘ No Women were HARMED During the Process of the Film’ என இந்த நேரத்தில் பதிவு செய்துகொள்கிறேன். என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி, குறிப்பாக அணைத்து கதாநாயகிகளுக்கு நன்றி. அனைவரும் திரையரங்கில் வந்து கண்டு மகிழுங்கள் என்றார்.

பிரேம்ஜி அமரன் பேசியபோது,

என் அண்ணன் படத்தில் நான் இசையமைத்து வெளியாகும் படம் இது, கூடிய விரைவில் ‘பார்ட்டி’ படத்தையும் வெளியிடவேண்டும் என T சிவா சாரை கேட்டுக்கொள்கிறேன். என் அண்ணனுக்கு மூளை அதிகம் அதனால் தான் மாநாடு எடுத்துவிட்டு இப்படி ஒரு படத்தை இயக்கியுள்ளார். தளபதியின் பீஸ்ட் வரும் வரை எங்கள் படம் தான். அனைவரும் திரையரங்கில் வந்து கண்டு மகிழ வேண்டும் என்றார்.

 

இயக்குனர் வெங்கட் பிரபு பேசியபோது,

இந்த படத்தின் கதையை என்னுடைய உதவி இயக்குனர் மணி தான் எழுதிக்கொடுத்தார், வேறு ஒருவரின் கதையை இயக்கியது இதுவே முதல் முறை அதுவும் என்னுடைய உதவி இயக்குனரின் கதையை இயக்கியது பெருமையும் மகிழ்ச்சியும் கூட. நம் ஊரில் ஒரு சரியான அடல்ட் காமெடி படம் வரவில்லை, ஆனால் அந்த காலத்தில் பாக்யராஜ் சார் இயக்கிய படங்கள் எனக்கு ஒரு எடுத்துக்காட்டு. ‘american pie’, ‘sex education’ போன்ற ஒரு வெளிப்படையான செக்ஸ் கதைகளை தற்போது எடுக்க இயலாது.

இந்த படம் ‘A’ சான்றிதழ் பெற்ற படம். 18 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் முகம் சுழிக்காமல் பார்க்கலாம், மிகவும் நாகரிகமான முறையில் இந்த படத்தை இயக்கியுள்ளேன். நான் ஒரு நாகரிகமான குடும்பத்தில் இருந்து வளர்ந்த ஒருவன் அதனால் அந்த பெயரை காப்பாற்ற வேண்டிய ஒரு கடமையும் பொறுப்பும் உள்ளது.

இந்த படத்தில் குறுகிய காலத்தில் வேலைபார்த்த அனைவருக்கும் நன்றி. இந்த படத்தில் முக்கியமான ஒரு சர்ப்ரைஸ் கதாபாத்திரதில் ஒருவர் நடித்துள்ளார், அதை நீங்கள் படத்தில் பார்த்தால் கொஞ்சம் சுவாரஸ்யமாய் இருக்கும். அந்த கதாபாத்திரத்தில் நடித்த அந்த நபருக்கு நன்றி.

இது ஒரு கில்மா படம் இல்லை, இந்த படத்தில் வரும் ஏதோ ஒரு காட்சியாவது உங்கள் வாழ்க்கையில் நடந்தது போன்று இருக்கும். படத்தை பார்த்த ஒருவர் என்னிடம் இதை பகிர்ந்து கொண்டார். எனவே அனைவரும் படத்தை தியேட்டரில் பார்த்து மகிழுங்கள் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *