வெளியானது ‘மன்மத லீலை’ படத்தின் ரிலீஸ் தேதி

இயக்குனர் வெங்கட் பிரபுவின் 10வது படம் ‘மன்மத லீலை’. மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரிப்பில் ராக் போர்ட் என்டேர்டைன்மெண்ட் வழங்கும் இப்படத்தில் அஷோக் செல்வன் கதநாயகனாகவும். இவருக்கு ஜோடியாக ஸ்ம்ருதி வெங்கட், சம்யுக்தா, ரியா சுமன் நடிக்கின்றனர். பிரேம்ஜி அமரன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியாகி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் பெற்றது.

இதை தொடர்ந்து இந்த படத்தின் ரிலீஸ் வருகின்ற ஏப்ரல் 1ம் தேதி அன்று வெளியாகும் என இன்று காலை அறிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *