லாக் டவுன் டைரி பட இசை, டிரெய்லர் வெளியீட்டு விழா
900 படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியிருக்கும் ஜாலி பாஸ்டியன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் பி.கே.எச் தாஸ். இசை ஜாசி கிஃப்ட் & AB முரளி
இதில் ஜாலி பாஸ்டியன் மகன் விஹான் ஜாலி (அமீத்) கதாநாயகனாக அறிமுகமாகிறார். சஹானா கதாநாயகியாக நடிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர்,. மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் இசை, டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பத்திரிக்கையாளர்கள் மீடியாவினர் முன்னிலையில் நடந்தது. நிகழ்ச்சியில் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவர் கே.ராஜன், பெப்சி விஜயன், தவசி ராஜ், நடிகர்கள் முத்துக்களை, எம்.எஸ்.பாஸ்கர், நடிகை பிரவீனா, லியாகத் அலிகான், வசனகர்த்தா பிரபாகரன், எஸ்.முரளி மற்றும் பட குழுவினர் கலந்துகொண்டனர்.
இயக்குனர் ஜாலி பாஸ்டியன் வரவேற்று பேசினார். அவர் கூறியது: 900 படங்களுக்கு ஸ்டண்ட் அமைத்து எல்லா ஹீரோக்களுடன்.பணியாற்றி இருக்கிறேன். கன்னடத்தில் ஒரு படம்.இயக்கி இருக்கிறேன். 2வது படமாக லாக் டவுன் டைரி என்ற படத்தை தமிழில் இயக்கி உள்ளேன். கொரோனா காலகட்ட லாக் டவுன் நேரத்தில் மக்கள் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளானார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். வீட்டிலேயே முடங்கி இருக்க வேண்டிய நிலை, மருந்து வாங்க கடைக்கு சென்ற இளைஞர்கள் போலீசிடம் அடி வாங்கினார்கள்.
இப்படி பல்வேறு சம்பவங்கள் நடந்தன. அதையெல்லாம் ஆராய்ச்சி செய்துதொகுத்திருப் பதுடன் இளம் காதல் ஜோடி ஒன்று இந்த இக்கட்டான நேரத்தில் சிக்கி எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை மையமாக வைத்து லாக் டவுன் டைரி படம்.உருவாகியிருக்கி றது. இது லாக் டவுன் கால கதை மட்டுமல்ல குடும்பங்களின் கதையும் உள்ளடக்கியது. குடும்பத்துடன் இப்படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள். உங்கள் எல்லோருக்கும் இப்படம் நிச்சயம்.பிடிக்கும் .இப்படத்தில் இடம் பெறும் லாக் டவுன் பற்றிய பாடலை நான் எழுதி இருப்பதுடன் திரைக்கதை, ஸ்டண்ட் அமைத்து இயக்கி உள்ளேன். வசனத்தை பிரபாகர், எஸ்.பி.ராஜ்குமார் எழுதி உள்ளனர். டைமண்ட் பாபு புரமோஷன் உள்ளிட்ட பணிகளுக்கு எங்களுக்கு உறுதுணையாக இருக்கிறார். இவ்விழாவில் கலந்துகொண்டு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.
பெப்சி விஜயன் பேசியதாவது:
இந்த படத்தின் இயக்குனர் ஜாலி மாஸ்டர் பைக் ஜம்பர், அவரது மகன் இப்படத்தின் ஹீரோ டிரக்கையே ஜம்ப் செய்திருக் கிறார். உயிரை பணயம் வைத்து அவர் இதெல்லாம் செய்திருக்கி. றார். இதில் ஹீரோவை ஒரு தொழிலாளியாகத்தான் காட்டியிருக்கிறார்கள். இந்த பட டிரெய்லரை பார்க்கும்போதே இதயத்தை பிசைவது போன்ற ஒரு கதையை சொளல்லபோகிறார்கள் என்று தெரிந்தது.
இவ் விழாவின் இறுதியில் இயக்குனர் ஜாலி பாஸ்டியன் நன்றி கூறினார்.