லாபம் திரை விமர்சனம் 3/5

விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன், ஜெகபதி பாபு, கலையரசன், சாய் தன்ஷிகா மற்றும் பலர் நடித்து, S.P.ஜனநாதன் இயக்கத்தில் இன்று வெளிவந்த படம் லாபம். தனது கிராமத்தை விட்டு வெளியேறி 5 வருடம் உலகத்தை சுற்றி நாட்டின் வளங்களை அறிந்து, தனது கிராமத்திற்கு வந்து விவசாயம் முக்கியம், மண்ணின் வளம் முக்கியம் என ஊர் மக்களுக்கு உணர்த்தி, விவசாய சங்க தலைவராகிறார் பக்கிரி என்னும் கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி, பின்னர் அங்குள்ள கார்ப்பரேட் முதலாளியான மற்றும் முன்னாள் விவசாயி சங்க தலைவரான ஜகபதி பாபுவிடம் இருந்து தனது லாபத்தை மட்டும் பார்த்து அந்த மண்ணின் வளத்தை அழிக்க நினைக்கும் எண்ணத்தை மட்டுமல்லாமல் அவரையும் அழிக்கும் விதத்தில் இந்த படத்தின் கதை அமைந்த வண்ணம் உள்ளது. கதை கேட்பதற்கும் ஆரம்பித்த விதம் சுவாரசியமாய் இருந்தாலும், திரைக்கதையில் பெரும் சொதப்பல் செய்துவிட்டார் இயக்குனர். நாம் இதுவரை அறியாத பல நிகழ்வுகளை ஆராய்ச்சி செய்து வசனங்கள் வாயிலாக வெளிப்படுத்தியதே திரைக்கதை ஆமை போன்று நகர்ந்ததன் காரணம். இளைய சமுதாய விவசாயத்தை உணர்த்தும் படமாகவும் கார்ப்பரேட் கம்பெனிகளின் லாபத்தை வெளிப்படுத்தும் படமாகவும், உழைப்பாளிக்கும் வியாபாரிக்கு இடையில் எங்கிருந்து லாபம் வந்தது என்னும் கேள்விகளோடு இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் S.P.ஜனநாதன்.

விஜய் சேதுபதி வழக்கம் போல் நடித்திருந்தார்.  ஸ்ருதி ஹாசன் நடிப்பு சிறப்பாக இருந்தது. ஜெகபதி பாபு தனக்கு குடுத்த பணியை சிறப்பாக செய்திருந்தார்.

ராம்ஜியின் ஒளிப்பதிவும், கணேஷ் குமாரின் படத்தொகுப்பும் சொல்லும்படி இருக்கிறது. D.இமானின் இசை நன்றாக அமைந்திருக்கிறது.

லாபம் – எதிர்பார்த்ததை விட குறைவே

– நிதிஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *