இந்திரஜித் சுகுமாரன், சோபித, டோவினோ தாமஸ், பரத், சுரபி லக்ஷ்மி, சைன் டாம் சாக்கோ, இவர்களுடன் துல்கர் சல்மான் தயாரிப்பில், நடிப்பில். ஜிதின் k ஜோஸ் எழுத்தில்,ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவான படம் ‘குருப்’.
ஒரு உண்மையான குற்றவாளியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்க பட்ட படம் ‘குருப்’.
+2 முடித்த மாணவன் கோபிகிருஷ்ணன்(துல்கர் சல்மான்) இந்திய விமான படைக்கு தேர்ச்சி பெற்று மெட்ராஸ் செல்கிறான். பின்னர் அங்கு எப்பொழுதும் சிறு சிறு தவறுகள் செய்து அடிக்கடி தண்டனை பெறுவான்.
அவனின் பயிற்சி காலம் முடிந்த பின் வேலைக்காக மும்பை செல்கின்றான். வேலையின் அழுத்தம் தாங்காமலும், மேல் அதிகாரிகளும் குடைச்சல் தாங்காமலும் சோர்வுற்று 1 மாத காலம் விடுப்பு எடுத்து தனது ஊருக்கு திரும்புகின்றான்.
சில நாட்கள் கழித்து வேலை செய்யும் இடத்திற்கு கோபிகிருஷ்ணன் இறந்த செய்தி வருகிறது. செய்தியை கேட்டதும் அவனின் காதலி சாராத(சோபித) கவலையுடன் நிற்கிறால். அடுத்த கணமே அவளின் கைக்கு ஒரு செய்தி வருகிறது, செய்தியை கேட்டு இவள் தன காதலனை சந்திக்கிறாள்.
அங்கு ஒருவர் இவரின் பெயரை கேட்டபோது கோபிகிருஷ்ணன் என்பதற்கு பதிலாக சுதாகர் குருப் என கூறுகிறார். கதையின் திருப்பமும் அது தான். தனது காதலியை அழைத்து கொண்டு பெர்சியா சென்று சில ஆண்டுகள் கழித்து இந்தியா திரும்புகிறார் குருப்.
இந்தியா வந்த இவர் இவரின் கூட்டாளிகளிடம் பெர்சியா நாட்டில் இவர் பெயரில் 8 லட்சம் இன்சூரன்ஸ் உள்ளது, அது நம் கைக்கு வர வேண்டுமென்றால் நான் இறந்து போல் நாடகம் ஆட வேண்டும், அதற்கு என்னை போன்று உயரமும் நிறமும் உள்ள ஒரு ஆள் தேவை என்று கூறிவிட்டு போக.
பிணத்தை தேடி செல்கின்றனர் இவரின் கூட்டாளிகள், பிணம் ஏதும் கிடைக்காத நிலையில் உயிருடன் இருக்கும் சார்லி(டோவினோ தாமஸ்) ஐ எரித்து கொன்றுவிடுகின்றனர். போலீஸ் பக்கமோ பெர்சியாவில் 80000 ரூபாய் சம்பாதிக்கும் இவர் 8 லட்சத்திற்காக கொலை செய்திருக்க மாட்டார் என உறுதி படுத்துகின்றனர்.
எதற்காக இவர் இறந்து போல் சித்தரித்தார்? எதற்காக பெயரை மாற்றினார்? அடுத்து இவர் என்ன செய்யவுள்ளார்? என்பது மீதி கதை.
ஆரம்பம் முதல் படத்தின் திரைக்கதை கொஞ்சம் சலிப்பு தான். அங்கு அங்கு கதை சூடுபிடிக்க தொடங்கினாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எட்டவில்லை. ஒரு உண்மை குற்றவாளியின் கதையாக இருந்தாலும், படத்திற்காக ஒரு சில இடங்களில் மசாலா சேர்த்திருக்கலாம்.
படம் 1960 மற்றும் 1980 கால கட்டத்தில் நகர்ந்தாலும், காட்சி படுத்துவதற்காக அவர்கள் போட்ட உழைப்பு வீண் போகவில்லை.
துல்கர் சாலமன் நடிப்பு வழக்கம் போல் அசத்தல் தான். நடிப்பிற்கு எவரும் பஞ்சமில்லை அனைவருமே ஒரு எதார்த்த நடிப்பு தான்.
படத்திற்கு பக்க பலமாய் இருந்தது சுசின் ஷாம்(ன்) இசை.
நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவு ரசிக்கும் வகையிலே இருந்தது.
எடிட்டிங்கில் சிறிது கவனம் செலுத்தியிருக்கலாம் விவேக் ஹர்ஷன்.
பொதுவாகவே மலையாள படங்களில் நடிகர்களை விட கதைக்கு தான் அதிக படியான முக்கியத்துவம் இருக்கும், இந்த படமோ அந்த வகையில் இல்லை.
படத்தின் ட்ரைலர் மாஸாக இருந்தாலும் ஒரு குரூப் படங்கள் சுமாராக தான் இருக்கும். அந்த குரூப்பில் இணைந்தது ‘குருப்’.
குருப் – உண்மையில் சுவாரசியம் இல்லை.