இன்பினிட்டி பிலிம் வேண்டுரெஸ், செந்தூர் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ஆத்மீகா, ராமசந்திர ராஜு, சூப்பர் சுப்புராயன் நடிப்பில், N.S.உதய குமார் ஒளிப்பதிவில், நிவாஸ் K பிரசன்னா இசையில் உருவான படம் கோடியில் ஒருவன்.
கிராமத்தில் பிறந்து தனது அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவதற்கு சென்னைக்கு படிக்க வரும் நம் கதாநாயகன், அப்பகுதியிலுள்ள அரசியல்வாதிகளாலும் ரௌடிகளாலும் பல பிரச்சணைகளை சமாளித்து, ஒரு கட்டத்திற்கு பிறகு தன பொறுமையை இழந்து அவர்களை அடக்கும் அளவிற்கு பெரிய பதவியில் இருக்க வேண்டும் என எண்ணி தனது அரசியல் பயணத்தை துவங்குகிறார், அரசியலில் சுயேட்சையாக வரும் இன்னல்களையும் சமாளித்து எவ்வளவு தூரம் செல்கிறார் என்பது இந்த படத்தின் கதை அமைப்பு.
சுவாரசியமான திரைக்கதை, கதைக்கு தேவையான நடிப்பும் படத்தொகுப்பையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய் ஆண்டனி, வெகு சில காட்சிகளில் வந்தாலும் கூட கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார் ஆத்மீகா, வழக்கம்போல் மிரட்டல் நடிப்பில் ராமச்சந்திரன் ராஜு.
இப்படத்தில் முக்கியமாக குறிப்பிடும் வகையில், கலை இயக்குனர் பாப்பாநாடு C உதயகுமார் சட்டசபையையும் மக்கள் குடியிருப்பு பகுதியையும் ரசிக்கும்படி அமைத்துள்ளார், அற்புதமான சண்டைக்காட்சிகள் மகேஷ் மெதிவ் இயக்கியுள்ளார், தேவைப்படும் இடங்களில் பின்னணியில் கதைகேற்கும் விடுதலை தலைவர்கள், மற்றும் போராளிகளின் படங்களை வைத்து காட்சிப்படுத்தியவிதம் பாராட்டத்தக்கது, பின்னணி இசை இந்த படத்திற்கு கூடுதல் பலம்.
கோடியில் ஒருவன் – அனைவரின் மனங்களையும் வென்றுவிட்டான்
– நிதீஷ்