காட்டேரி விமர்சனம் (2/5)

வைபவ், ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, கருணாகரன், ரவி மரியா உட்பட பல நடிப்பில் இயக்குனர் டிகே இயக்கத்தில் உருவான காமெடி- திகில் – திரில்லர் திரைப்படம் “காட்டேரி”. இப்படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார். எஸ்.என். பிரசாத் இசையமைத்துள்ளார். பி எஸ் வினோத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

கதைப்படி..,

படத்தில் நைனா என்னும் டான் இருக்கிறார். அவரிடம் கூட்டாளி ஒருவன் தன்னுடைய நண்பர்களை சிக்க வைத்துவிட்டு தங்கப் புதையலை தேடி செல்கிறார். அவனை கண்டுபிடிப்பதற்காக கதாநாயகன் வைபவ் தன் நண்பர்கள் மற்றும் மனைவியுடன் செல்கிறார். அவர்கள் செல்லும் வழியில் ஒரு கிராமத்தை சென்றடைகிறார்கள்.வைபவ் அந்த கிராமத்தில் இருக்கும் வீட்டில் தன்னுடைய கூட்டாளி புகைப்படத்தை காட்டி விசாரிக்கிறார்.

அப்போது அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அவர் தேடி வந்த கிராமத்தில் அனைவருமே இறந்துபோய் பேயாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை தெரிய வருகிறது. பின் வைபவ் தன் நண்பர்களுடன் கிராமத்திலிருந்து தப்பித்தாரா? புதையல் என்ன ஆனது? தேடி வந்த நண்பனை கண்டுபிடித்தார்களா? பேய்க்கு என்ன பிளாஷ்பேக் என்பது மீதிக்கதை…

பி எஸ் வினோதின் ஒளிப்பதிவு சிறப்பு. படத்தின் கலை வேலைகளும் சிறப்பு.

வைபவ் நடிப்பு ஓகே. ஆத்மீகா, சோனம் பாஜ்வா, வரலக்ஷ்மி தங்களால் முடிந்ததை செய்துள்ளனர். மற்றபடி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எதுவுமில்லை.

ரவிமரியாவின் கதாபாத்திரம் வழக்கம் போல் இந்த படத்திலும் எரிச்சல் தான் கிளப்புகிறது.

இயக்கம், திரைக்கதை கதை என அனைத்தும் சொதப்பல் தான். யாயிருக்க பயமேன் படம் இயக்கியவரா இப்படத்தின் இயக்குனர் என்று சந்தேகம் தான் எழும்புகிறது. சப்பையான டயலாக், படம் முழுக்க இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்கள். பொது ஜனங்களுக்கான ஒரு வசனமாகவும் இல்லாமல், குடும்பமாக படம் பார்க்க வருவோர்களுக்கு ஏற்ற வசனமாகவும் இல்லாமல். அடல்ட் படம் படத்தின் வசனங்கள். நகைச்சுவை சுத்தமாக செட்டாகவில்லை.

திகில் காட்சிகள் ஒன்றும் ஒர்க்அவுட் ஆகவில்லை. இசை ஓரளவு படத்தை கவனிக்கச் செய்துள்ளது.

காட்டேரி – மார்க்கெட் இழந்த பேய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *