அப்படி வாங்க ரஜினி; ஒரு இனமே நடக்கும் ராஜபாட்டை… கமல் அழைப்பு

Kamal welcomes Rajinis statment on CAA and Modi Govt Delhi violence

இன்று மாலை ரஜினி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த போது…

சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால்தான் முதல் ஆளாக நிற்பேன் என்று தான் கூறியிருந்தேன்.

உளவுத்துறையின் தோல்வி தான் டெல்லி வன்முறைக்கு காரணம். மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு வன்முறையை ஒடுக்க வேண்டும். முடியாவிட்டால் ராஜினாமா செய்ய வேண்டும்.

மக்கள் என்ன போராடினாலும் மத்திய அரசு இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறாது என நினைக்கிறேன்.

சில கட்சிகள் மதத்தை வைத்து அரசியல் செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என பேசியிருந்தார் ரஜினி.

இந்த நிலையில், ரஜினியின் கருத்தை வரவேற்று கமல் தன் கருத்தை கூறியுள்ளார்.

அதில், சபாஷ் நண்பர் ரஜினிகாந்த் அவர்களே, அப்படி வாங்க, இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜபாட்டை வருக வாழ்த்துகள் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரவேற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *