மலை கிராமத்தை சேர்ந்த ஜி.வி. பிரகாஷ் குமாரும், தீனாவும் திருட்டு வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் யானை மிதித்து அந்த கிராமத்தில் சிலர் இறந்துவிடுகிறார்கள். இதை மையமாக வைத்தே கதை நகர்கிறது.
பொறுப்பில்லாத வாலிபராக இருக்கிறார் ஜி.வி. பிரகாஷ் குமார். இந்த நேரத்தில் அங்கு வரும் இவானாவுக்கும், ஜி.வி. பிரகாஷ் குமாருக்கும் இடையே காதல் ஏற்படுகிறது. ஒரு பெண்ணின் காதலால் மாறுகிறார் ஜி.வி. பிரகாஷ் குமார்.

படத்தின் பெரிய பலமே பாரதிராஜா தான். தன் அபார நடிப்பால் நம்மை எல்லாம் ஈர்க்கிறார். பாரதிராஜாவை அடுத்து நடிப்பில் கைதட்டல் வாங்குகிறார் இவானா. கதையில் அழுத்தம் இல்லாததால் தியேட்டருக்கு வருபவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த தவறுகிறது.
டுவிஸ்ட்டுகளும், நகைச்சுவை அதிகம் காட்சிகளும் வைத்திருந்தால் படம் சிறப்பாக இருந்திருக்கும். அடுத்து என்ன நடக்கும் என யூகிக்க வேண்டியதே இல்லாத அளவுக்கு படம் இருக்கிறது.
கொத்த வேலையை செய்திருக்கிறார் ஜி.வி. பிரகாஷ் குமார். ஹீரோவின் கதாபாத்திரத்தை விளக்க வேண்டுமே என்பதற்காக ஒரு அறிமுக பாடலை வைத்திருக்கிறார்கள். ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு இவானா மீது காதல் வரும்போது ஒரு பாடல். இவானாவுக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் மீது காதல் வரும்போது ஒரு பாடல் வைத்திருக்கிறார்கள். சிஜிஐ படத்திற்கு கை கொடுக்கவில்லை.
நான் நாயர் அல்ல நம்பூத்ரி என யானைப் பாகன் அடிக்கடி சொல்வது எரிச்சல் அடைய வைக்கிறது.
-நிதிஷ்