உதயநிதியின் கலகத்தலைவன் பட ட்ரைலருக்கு இத்தனை மில்லியன் வியூஸா?

தடையறத் தாக்க, மீகாமன், தடம் போன்ற திரைப்படங்களை இயக்கிய மகிழ் திருமேனியின் இயக்கத்தில் நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் ‘கலகத் தலைவன்’. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார்.

‘கலகத் தலைவன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில், படத்தின் டீசர் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்தது.

இந்த நிலையில், ‘கலகத் தலைவன்’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் படத்தின் ட்ரைலர் வெளியான நிலையில், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விழாவில் படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குநர்கள் மிஷ்கின், மாரிசெல்வராஜ், பிரதீப், சுந்தர்.சி, நடிகர்கள் அருண் விஜய், விஷ்ணு விஷால் மற்றும் புரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

இந்த படம் வருகிற நவம்பர் 18 ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், ட்ரைலர் வெளியான 4 நாட்களில் 2 மில்லியன் வியூஸை கடந்து இணையத்தில் வைரலாகியும். மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

https://youtu.be/2xvSYwXWgWg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *