கலகத்தலைவன் விமர்சனம் – (3.5/5)

உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்திருக்கும் படம் “கலகத் தலைவன்”. பிக் பாஸ் ஆரவ், நிதி அகர்வால், கலையரசன் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், ஆரோல் கொரெல்லி பாடலமைத்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசையமைத்துள்ளார்.

கதைப்படி,

இந்தியாவில் மிகப்பெரும் முன்னணி கார்பரேட் நிறுவனம் “வஜ்ரா”. அந்நிறுவனத்தின் ரகசியங்களை திருடி ஒரு கும்பல் விற்கின்றது. அந்த ரகசியங்களை விற்பது யார் என்பதை அறிய வஜ்ரா நிறுவனம் ஆரவ்விடம் உதவி நாடுகிறது.

வஜ்ரா நிறுவனத்தில் வேலை செய்யும் சிலரை விசாரித்த ஆரவ். உதயநிதி தான் கார்பரேட் நிறுவன ரகசியங்களை விற்கிறார் என்பதை கண்டறிகிறார்.

உதயநிதி என் கார்பரேட்டின் ரகசியங்களை வெளியிடுகிறார்? உதயநிதியை ஆரவ் என்ன செய்தார்? என்பது படத்தின் மீதிக்கதை…

ஆரம்பத்தில் காமெடி கதைகளை தேர்வு செய்து நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின். சமீபமாக த்ரில்லர் கதைகளில் கலக்கி வருகிறார். அந்த வகையில் ஆக்ஷன் த்ரில்லர் கதை தான் “கலகத்தலைவன்”.

அனுபவமுள்ள நடிப்பு, அட்டகாசமான ஆக்ஷன், அழகிய ரோமன்ஸ் என நம்மை ரசிக்க வைத்திருக்கிறார் உதயநிதி.

ரொமான்டிக் காட்சிகளில் மட்டுமே வந்து செல்லும் நிதி அகர்வால் இப்படத்திற்கு தேவையா என்று சற்று சிந்தித்திருக்கலாம்.

கொடூர வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆரவுக்கு குழந்தைமுகமே. இன்னும் தேர்ச்சி வேண்டும்.

உடன் நடித்த கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரின் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார்.

அரசாங்கத்தின் ஒரு நிறுவனம் கார்பரேடிடம் விற்கப்பட்டதற்கே இவ்வளவு பாதிப்பா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளார் மகிழ் திருமேனி.

முதல் பாதி விறுவிறுப்பாகவும், இரண்டாம் பாதி சிந்திக்கும் வகையிலும் அமைத்துள்ளார் மகிழ் திருமேனி. அங்கங்கே குறைகள் இருந்தாலும், அதை கவனிக்க முடியாத அளவுக்கு திரைக்கதை அமைத்தது மகிழ் திருமேனிக்கு கிடைத்த வெற்றி.

கலகம் பிறந்தால் வழிபிறக்கும். அதே போல், உதயநிதியின் வாழ்க்கைக்கு கேள்விக்குறியாய் அமைந்த கலகம் தான். இவ்வளவு பெரும் விளைவுக்கு காரணம்.

யதார்த்த சண்டைக்காட்சி, சாமானியனால் இது முடியுமா? என்று கேள்வியெழாத கதையம்சம் படத்தின் சிறப்பு.

கலகத்தலைவன் – சமூக சீர்கேட்டின் வெளிப்பாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *