மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் காஜல் அகர்வாலின் மெழுகு சிலை

மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை பெரும் முதல் தென்னிந்திய நடிகை  காஜல் அகர்வால் !

சிங்கப்பூரில் உள்ள ‘மேடம் துசாட்ஸ்’ அருங்காட்சியகத்தில் நடிகை காஜல் அகர்வாலின் மெழுகு சிலை நாளை திறக்கப்பட உள்ளது.

சிங்கப்பூரில் உள்ள ‘மேடம் துசாட்ஸ்’ மெழுகு அருங்காட்சியகம் பல்வேறு நாட்டிலிருந்து வரும் மக்களை கவரும் புகழ் பெற்ற சுற்றுலா சுற்றுலாத்தலம்.  அந்த அருங்காட்சியகத்தில் பல துறைகளில் உலக புகழ் பெற்றவர்களின் மெழுகு சிலைகள் உள்ளன.

மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, ராணி எலிசபெத், ஒபாமா, சச்சின் டெண்டுல்கர், ஜாக்கிசான், அமிதாப்பச்சன், ஷாருக்கான், கஜோல், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலரின் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன.

தற்போது தென்னிந்தியாவில் முன்னிலை நடிகையாக திகழும் காஜல் அகர்வாலுக்கு மெழுகுசிலை அமைக்கப்பட்டுள்ளது .

தென்னிந்தியாவில் பிரபாஸ், மகேஷ் பாபு போன்ற சூப்பர்ஸ்டார்களுக்குப் பிறகு, காஜல் அகர்வால்  மூன்றாவது நடிகராகவும், முதல் தென்னக நடிகையாகவும்  இந்த கௌரவத்தை பெறுகிறார் .

இந்த சிலையை  நாளை சிங்கப்பூரில் காஜல் அகர்வால் திறந்து  வைக்கிறார் .
Kajal Aggarwal becomes FIRST South Indian actress to get a Madame Tussauds Wax Statue.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *