கொரோனா வைரஸ் நிவாரண நிதியளித்த காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால் 2 லட்சம் ரூபாய் நிதியுதவியை கொரோனா வைரஸ் பரவலால் வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட பெப்சி தமிழ் திரைப்பட தொழிலாளர்களுக்கு வழங்கினார்.

மேலும், கொரோனா வைரஸ் நிவாரண தொகையாக தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு 2 லட்சமும், பிரதம மந்திரியின் நிவாரண நிதிக்கு 1 லட்சமும், மஹாராஷ்ட்ரா மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு 1 லட்சமும் வழங்கியுள்ளார்.

மும்பையில் தான் வசிக்கும் பகுதியில் அருகளிலுள்ள மக்களுக்கு உணவு மற்றும் தானியங்கள் வழங்கினார். மேலும், பீட்டாவுடன் இணைந்து விலங்குகளை தத்தெடுத்தும் உணவளித்தும் உதவி செய்து வருகிறார் நடிகை காஜல் அகர்வால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *