ஐபிஎல் 15ஆவது சீசன் வரும் மார்ச் 26ஆம் தேதி துவங்கவுள்ளது. இதில் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோத உள்ளது.
இந்நிலையில், சிஎஸ்கே முதல் அணியாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பே பயிற்சியை துவங்கியிருந்தது. வீரர்கள் அனைவரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மகேந்திரசிங் தோனி ஒரு வீரராக மட்டுமே அணியில் நீடிப்பார் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தோனிக்கு தற்போது 40 வயதை கடந்துவிட்டார். இதனால், இந்த சீசனோடு ஓய்வு பெறவும் வாய்ப்புள்ளது. எனவே, ஜடேஜாவை கேப்டனாக நியமித்து, அணியை எப்படி வழிநடத்த தோனி வழிகாட்டியாக செயல்படுவார் எனக் கருதப்படுகிறது.
மேலும், களத்தில் தோனியின் ஆலோசனையைகேட்டு, ஜடேஜா செயல்படவும் வாய்ப்புள்ளது.
மகேந்திரசிங் தோனி 2008ஆம் ஆண்டு முதலே, சிஎஸ்கேவுக்கு கேப்டனாக செயல்பட்டு வந்தார். மொத்தம் 220 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 39.5 சராசரியுடன் 4746 ரன்களை அடித்துள்ளார்.
குறிப்பாக, கடைசி ஓவர்களில் மட்டும் 50 சிக்ஸர்களை அடித்து, கடைசி ஓவரில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.