12 ஆயிரம் பேருக்கு ஜாக்பாட் – அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு

12,000 பேருக்கு வேலைவாய்ப்பு தருகிறார் அமைச்சர் ஜெயக்குமார்!

உலகமே கொரோனா பாதிப்பால் அச்சத்தில் உறைந்து கிடக்கிறது. இந்த நேரத்தில் பல்வேறு நிறுவனங்களில் ஊதியக் குறைப்பு, ஆட்குறைப்பு போன்ற நடவடிக்கைகளால் தங்கள் எதிர்காலத்தை இழந்து நிற்பவர்கள் ஏராளம். இவர்களுக்கே இந்த நிலை என்றால் பெரும் கனவோடு, படித்து முடித்து வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் இளைஞர்கள் பலர் இன்று விரக்தியின் விழும்பில் நின்று எதிர்காலம் என்னவாகும் என்பதற்கு விடை தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் மக்கள் நலனை எப்போதும் நினைவில் வைத்துக்கொண்டு,அரசியல் கடந்து அனைவருக்கும் பொதுவான மனிதராக வலம் வரும் அமைச்சர் ஜெயக்குமார் புதிய முயற்சியை துவக்கியிருக்கிறார். அவரது சீரிய முயற்சியால் இதோ உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு காத்திருக்கிறது. ஆம் 12 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவதற்கு மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்திருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.

150 தனியார் நிறுவனங்களை ஒன்று சேர்த்து அவர்களுக்குத் தேவையான நபர்களை வேலைக்கு தேர்வு செய்து பணியமர்த்தி, கை நிறைய சம்பளம் பலருக்கும் கிடைப்பதற்கான அரியதோர் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது. வரும் பிப்ரவரி 27ஆம் தேதி அதாவது சனிக்கிழமை மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.

8ம்வகுப்பு, 10ம்வகுப்பு,12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி, பி.இ, எம்பிஏ, நர்சிங், ஃபார்மசிஸ்ட்,கேட்டரிங் படிப்பு படித்தவர்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம்.150 நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாமில் 12 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க இருக்கிறது.

சென்னை ராயபுரத்தில் உள்ள தூய பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளி, மேற்கு மாதா கோயில் தெரு, ராயபுரம் ரயில்வே நிலையம் அருகில், சென்னை 600018…

இந்த முகவரியில் காலை 8 மணி முதல் 3 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் வேலை நியமனம் பெற்றோர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கனவே பதிவு செய்திருந்தால் அது ரத்து செய்யப்பட மாட்டாது என்பது கூடுதல் சிறப்பம்சமாகும். இலவச திறன் பயிற்சிக்கான ஆலோசனை, அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்வதற்கான ஆலோசனை, டிஎன்பிஎஸ்சி, பேங்க், ரயில்வே உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சிக்கான சேர்க்கையும் நடைபெறுகிறது.

இதில் பங்கேற்க விரும்புபவர்கள் நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். முகவரி tnpraivatejobs.tn.gov.in

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *