தமிழக கோவில்களை காக்க குரல் கொடுக்கும் சத்குருவுக்கு எதிராக அவதூறு பரப்புபவர்களுக்கு ஈஷா கண்டனம்

தமிழக கோவில்களை காக்க குரல் கொடுக்கும் சத்குருவுக்கு எதிராக அவதூறு பரப்புபவர்களுக்கு ஈஷா கண்டனம்

அழிந்து வரும் தமிழக கோவில்களை காக்கும் உன்னதமான பணியை முன்னெடுத்துள்ள சத்குருவுக்கு எதிராக ஆதாரமின்றி அவதூறு பரப்பும் நபர்களை ஈஷா வன்மையாக கண்டிக்கிறது.

கோவில் அடிமை நிறுத்து இயக்கம் தமிழக மக்களிடம் நம் கோவில்களின் இன்றைய நிலை குறித்த மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக கோவில்கள் தமிழ் கலாச்சாரத்தின் பெருமை, இக்கோவில்களின் இன்றைய நிலையைக் கண்டு தமிழ் மக்கள் மனம் பதைத்து கோவில்களை பக்தர்களே நிர்வகிக்க வேண்டும் என்ற உறுதியினை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

பல லட்சக்கணக்கான பக்தர்களின் குரலாகவே சத்குரு ஒலித்துள்ளார். இவ்வியக்கம் பல்வேறு அரசியல் தளங்களிலும் பல வகைகளில் ஆதரவை பெற்றுள்ளது.

சொற்பநேர நீர்குமிழிகளாய் உருவாகியுள்ள இந்த குழுக்கள், அறநிலையத்துறை, கோவில்களின் பரிதாப நிலையை பற்றி நீதிமன்றத்தில் தெரிவித்த போது ஒன்றும் பேசாமல் இருந்துவிட்டு,….

இப்போது தமிழர்களுக்கு கோவிலை யார் நிர்வகிக்க வேண்டும் என்று போதனை தர தேவையில்லை……

இந்நிலையில் சென்னையில் சிலர் நேற்று (ஏப்ரல் 13) நடத்திய செய்தியாளர் சந்திப்பு, சத்குரு மற்றும் ஈஷா யோக மையம் மீது அடிப்படை ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை கூறுவதன் மூலம் இந்த இயக்கத்தையும் தமிழ் மக்களின் உணர்வுகளையும் இழிவுபடுத்த முனையும் அறிவீனமான முயற்சி.

ஈஷா யோக மையம் ஜனநாயக முறையில் தேர்தெடுக்கப்படும் அரசுடன் இணைந்து செயல்பட்டு தமிழக கோவில்களை பக்தர்களிடம் ஒப்படைக்க தீர்வு காணும்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் பெரும்பாலும் அவதூறுகளும், அடிப்படை ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளுமே நிரம்பி இருந்தாலும், அதற்கும் இங்கு பதிலளித்துள்ளோம்.

1) உண்மையிலேயே இவர்களுடைய நோக்கம் கோவிலை பாதுகாக்க வேண்டும் என்பதாக இருந்தால், 1200 கடவுள் சிலைகள் இதுவரை களவு போயிருக்கிறதே அதை பற்றி வாய் திறக்காமல் இருப்பது ஏன்?

வெளி தணிக்கை (External Auditing ) நடத்த பட வேண்டும் என்ற சத்குருவின் கோரிக்கையை முன்மொழியாதது ஏன்? அறநிலைத்துறையில் நடக்கும் ஊழலை கேள்வி கேட்காதது ஏன்? 12000 கோவில்களில் பூஜை நடக்காமல் சிதைந்து அழிந்து கொண்டிருக்கும் தமிழர்களின் ஆன்மாவான கோவில்களை காக்க முயலாதது ஏன்?

இப்படி கோவில்கள் அழிவது பற்றியும் அதை காப்பது பற்றியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் , கோவிலை மீட்க நினைப்பவர்களை குற்றம் சொல்வது இந்த முறைகேட்டில் இவர்களுக்கும் பங்குள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது…

2. தமிழக கோவில்களை விடுவிக்க வேண்டும் என்பது பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் உள்ளது. அதையே தான் சத்குரு கூறியுள்ளார். எனவே பாஜக RSS குரலாக ஒலிக்கிறாரா சத்குரு ?
தமிழக கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சத்குரு அவர்கள் ஜனவரி 14 பொங்கல் திருநாள் அன்று முன்மொழிந்தார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜக தங்கள் தேர்தல் அறிக்கையில் கோவிலை விடுவிப்பதை சேர்த்துள்ளது. கடந்த 1989ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலேயே “கோயில்கள் அரசின் பிடியிலிருந்து விடுபட்டு, நல்லவர்கள் கைகளுக்குச் செல்ல வேண்டும். அதற்கு முயற்சிப்போம்” என்று கூறப்பட்டிருக்கிறது. இப்போது சத்குரு காங்கிரசின் குரலாக ஒலிக்கிறார் என சொல்லலாமா?

1970ல் விகடன் இதழ், மதசார்பற்ற அரசு கோவில்களை நிர்வகிப்பதை பக்தர்கள் விரும்பமாட்டார்கள் என்று தலையங்கமே எழுதியுள்ளது. அன்றிலிருந்து இன்று வரை இது மக்களின் கோரிக்கையாக உள்ளது…..

3. கர்நாடகத்தை சேர்ந்த சத்குரு தமிழக கோவில்களை மீட்பதை பற்றி பேசுவது ஏன்?

‘தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என அந்த சிவ பெருமானை எல்லா மனிதர்களுக்கும் பொதுவானவராக வைத்தது தான் தமிழ் சைவ நெறி. இதில் கர்நாடகம், கேரளம், தமிழகம் என்ற பிரிவினை இல்லை. பிரிவினைவாதிகள் இப்போது அனைத்து உயிர்களுக்கும் பொதுவான ஆன்மீகத்தில் பிரிவினை காண தொடங்கி இருப்பது பரிதாபமானது.

நேற்றுவரை இந்துமதத்தை எதிர்த்தவர்களும், நாத்திகவாதிகளும், கோவில்கள் மீது அக்கறை இல்லாதவர்களும் ஒரேநாளில் பக்தர்களாக மாறி இந்த ஆன்மீக இயக்கத்தை தொடங்கி இன்று இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தியுள்ளனர்.

இவர்களின் பின்னணியை சற்றே ஆராய்ந்தால், அனைவருக்கும் இவர்கள் நோக்கம் வெளிப்படையாக தெரியும்.

தொடர்ந்து அழிந்து வரும் நமது கோயில்களுக்காக ஒருங்கிணையாதவர்கள் இன்று தமிழக மக்கள் தங்கள் கோவில்களை மீட்க ஒருங்கிணையும் பொழுது அதை எதிர்க்கிறார்கள் எனில் இவர்களின் நோக்கம் என்ன? இவர்களை பின்னின்று இயக்கும் சக்திகள் எது? தமிழக கோவில்கள் மீட்கப்படாமல் முழுமையாக அழிந்து போக வேண்டும் என்று எண்ணுகின்ற கூட்டத்திற்கு இவர்கள் துணை போகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இவ்வாறு ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

One thought on “தமிழக கோவில்களை காக்க குரல் கொடுக்கும் சத்குருவுக்கு எதிராக அவதூறு பரப்புபவர்களுக்கு ஈஷா கண்டனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *