இன்டூ தி ஷேடோஸ்-ன் புதிய சீசனின் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டுக் கட்டம் துவக்கம்

மயாங்க் ஷர்மாவால் இணைந்து உருவாக்கப்பட்டு, இயக்கப்படும் இந்த உளவியல் சித்திரம், இந்த புதிய சீசனில் பல புதிய கதாபாத்திரங்கள் மற்றும் சில்லிடவைக்கும் திருப்பங்களுடன் மேலும் சிலிர்ப்பூட்டுவதாக அமையவுள்ளது. இந்தத் தொடர் 2022-ல் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

அபுன்டான்டியா என்டர்டெயின்மென்ட் உருவாக்கி தயாரித்துள்ள இந்த புதிய சீசன், அபிஷேக் பச்சன் மற்றும் அமித் சத் இடையேயான மோதலை உச்சக்கட்டத்திற்குக் கொண்டு வருகிறது, அதே சமயம் நவீன் கஸ்தூரியாவை முக்கியக் கதாபாத்திரத்தில் சேர்ப்பதன் மூலம் கதையில் ஒரு புதிய பரிமாணம் சேர்க்கப்பட்டுள்ளது

சமீபத்திய மற்றும் பிரத்தியேக திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை, Amazon Originals, Amazon Prime Music மூலம் விளம்பரமில்லா மியூசிக், இந்தியத் தயாரிப்புகளின் மிகப் பெரிய கலெக்‌ஷனின் இலவச விரைவான டெலிவரி, சிறந்த டீல்களுக்குமுன்கூட்டிய அணுகல், வரம்பற்ற வாசிப்புக்கு PRIME Reading மற்றும் மொபைல் கேமிங் உள்ளடக்கம் கொண்ட PRIME Gaming இவை அனைத்தும் ஆண்டுக்கு ரூ. 999 Amazon Prime உறுப்பினர் சந்தாவில் கிடைக்கிறது. Prime Video மொபைல் பதிப்பிற்குச் சந்தா செலுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் பெருமளவில் பட்டியலிடப்பட்டுள்ள Amazon-இன் தரமான உள்ளடக்கத்தைக் கண்டு ரசிக்க முடியும். Prime Video மொபைல் பதிப்பு Airtel ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்குத் தற்போது கிடைக்கக்கூடிய ஒற்றைப் பயனர், மொபைல் மட்டுமே திட்டமாகும்.

மும்பை, இந்தியா, அக்டோபர்-20, 2021: பெருமளவில் பாராட்டுதலை பெற்ற உளவியல் த்ரில்லரான ப்ரீத்: இன்டூ தி ஷேடோஸ்-இன் புதிய சீசனுக்கான ஆக்கப்பூர்வமான செயல்பாட்டுக் கட்டத்தின் துவக்கத்தை Prime Video அறிவித்துள்ளது. அபிஷேக் பச்சன், அமித் சத், நித்யா மேனன் மற்றும் சயாமி கேர் ஆகியோர் நடிக்கும் இத்தொடரில், நவீன் கஸ்தூரியா முக்கிய கதாபாத்திரத்தில் இணைகிறார். அபுன்டான்டியா என்டர்டெயின்மென்ட் உருவாக்கி, தயாரித்து மயாங்க் சர்மா இயக்கியுள்ள இந்தப் புதிய சீசன் டெல்லி மற்றும் மும்பையில் தயாரிப்பைத் தொடங்கியுள்ளது. இந்தத் தொடரை 2022-இல் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் Prime Video-இல் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

“ப்ரீத்: இன்டூ தி ஷேடோஸ் பெற்ற புகழ் மற்றும் உருவாக்கிய எதிர்பார்ப்பு ஒரு புதிய சீசனின் அவசியத்தை வலியுறுத்தியது. கதைக்களம் மேலும் தீவிரமடைந்து புதிய கதாபாத்திரங்கள் கதையில் மேலும் ஆர்வத்தைச் சேர்ப்பதால், இந்த பருவத்தில் எதிர்பார்ப்புகள் மற்றும் த்ரில் அதிகமாகவே இருக்கும். இந்த விருது பெற்ற தொடரின் புதிய சீசனுக்கானஅறிவிப்பு, எல்லைகளைத் தாண்டி இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வமான மற்றும் கவர்ந்திழுக்கும் கதைகளை உருவாக்கித் திரையிடுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மேலும் வலியுறுத்துகிறது ”என்று Prime Video India-இன், ஹெட் ஆஃப் ஒரிஜினல்ஸ் அபர்ணா புரோஹித் கூறினார்.

அபுன்டான்டியா என்டர்டெயின்மென்ட் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான விக்ரம் மல்ஹோத்ரா கூறுகையில் “ Amazon Prime Video உடன் எங்கள் பயணத்தின் ஒரு புதிய அத்தியாயத்தை ப்ரீத்: இன்டூ தி ஷேடோஸ்-இன் மற்றொரு பதிப்பின் மூலம் துவங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அபுன்டான்டியா என்டர்டெயின்மென்ட்-இல், பார்வையாளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் பொழுதுபோக்கை வழங்கும் பிரிவுகளில் உள்ளடக்கத்தை உருவாக்க நாங்கள் முயற்சி செய்கிறோம், மேலும் மிகவும் பிரபலமான மற்றும் திறமை வாய்ந்த இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்காக மற்றொரு அற்புதமான கதையைக் கொண்டுவருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மயாங்க் மீண்டும் தலைமைப் பொறுப்பில் இருப்பதோடு, ஒரு வலுவான எழுத்தாளர்கள் குழுவுடன் இணைந்து செயலாற்றுவதால் இந்த சீசனில் பல புதிய உணர்ச்சிகரமான கதாபாத்திரங்கள் இந்தச் சித்திரத்தில் பங்கேற்பர், மற்றொரு உற்சாகமான சீசனைத் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *