ராஜ்யசபா சீட், பாரத ரத்னா விருது, இப்போது குடியரசு தலைவர் என அடுத்தடுத்து வாய்ப்புகளை கையில் வைத்துள்ளார் இசைஞானி இளையராஜா.
சில தினங்களுக்கு முன் ‘மோடியும் அம்பேதகரும்’ என்ற புத்தகத்தில் அவர் எழுதிய முன்னுரையே இந்த அனைத்து வாய்ப்புகளுக்கு பாதையாக அமைந்தது.
பா.ஜ.க. இசைஞானி இளையராஜாவுக்கு ராஜ்ய சபா சீட் வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதை தொடர்ந்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இளையராஜாவை பாரத ரத்னா விருதிற்கு பரிந்துரை செய்ய தலைமைக்கு கடிதம் எழுதவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
குடியரசு தலைவர்?
அப்துல் கலாமிற்கு பிறகு தமிழகத்தில் எந்த குற்ற, ஊழல், அரசியல் பின்னணியும் இல்லாமல், தமிழகத்திற்கு மக்கள் செல்வாக்குள்ள ஒரு பொது மனிதரை தேடிய உளவுத்துறை டிக் செய்த நபர் தான் இசைஞானி.
இப்போது வரும் ஜனாதிபதி தேர்தலில், தமிழக முதல்வர் ஸ்டாலின் – மம்தா – ராகுல் கூட்டணி உருவாக்க போகும் போட்டி வேட்பாளருக்கு செக் வைக்கவே அமித்ஷாவின் முதல் தேர்வு.
இனி டெல்லியின் “ஜனாதிபதி” மாளிகையில்
சிம்போனி ஒலிக்கும்.
இது ஒருபுறம் இருக்க, தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை குடியரசு தலைவர் வேட்பாளராக தேர்வு செய்யவுள்ளதாக தகவல்கள் பரவியது குறிப்பிடத்தக்கது.