“ஹாஸ்டல்”ல ராகிங் இருக்கும்; ஆனால் வார்டனயே (Trident arts) ராகிங் செய்யும் ஹாஸ்டல்

அசோக் செல்வன் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான படம் “மன்மத லீலை”. ரசிகர்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. அசோக் செல்வன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஓ மை கடவுளே’, ‘தீனி’ போன்ற படங்கள் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. ஆனால் இன்று வெளியாகும் “ஹாஸ்டல்” திரைப்படம் மிகவும் குறைந்த அளவிலான முன் பதிவுகளையே கொண்டுள்ளது.

அசோக் செல்வன், ப்ரியா பவானி ஷங்கர்,நாசர் நடிப்பில் சுமந்த் ராதா கிருஷ்ணன் இயக்கத்தில் இன்று வெளியாகும் படம் “ஹாஸ்டல்”. “அடி கப்யரே கூடமணி” என்னும் மலையாள படத்தின் ரீமேக் தான் இந்த ஹாஸ்டல். இந்த படத்தை TRIDENT ARTS நிறுவனம் சார்பில் R.ரவீந்திரன் தயாரித்துள்ளார்.

TRIDENT ARTSன் தொடர் தோல்விகள்,

தொட்டதெல்லாம் தங்கம் என்பது போல் இந்நிறுவனம் விநியோகம் செய்த படங்களில் பல படங்கள் வெற்றி அடைந்தாலும், இந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படு தோல்வியை மட்டுமே சந்தித்து தொட்ட அனைத்தும் தகரமாகவே உள்ளது.

சிவலிங்கா, லக்ஷ்மி, சிக்ஸர், அருவம், ஆக்ஷன், என்ன சொல்ல போகிறாய் என அனைத்து படங்களும் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான தேவி 2 படம் மட்டுமே தக்க லாபத்தை கொடுத்தது.

குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் குமார் நடிப்பில் வெளியான “என்ன செல்ல போகிறாய்” படம் காட்சிகள் ரத்து செய்யப்பட்ட அளவிற்கு தோல்வியை சந்தித்தது.

இன்று வெளியாகும் “ஹாஸ்டல்” படமும் கிட்ட தட்ட அதே நிலைமை தான் போல, பல திரையரங்குகள் இந்த படத்தை வாங்க முன் வரவில்லை. அப்படியே திரையங்குகள் இந்த படத்தை வாங்கினாலும் மக்கள் யாரும் திரையரங்கின் டிக்கெட்டை வாங்க முன் வரவில்லை.

விநியோகத்தில் லாபம் பார்த்த இந்நிறுவனம் தயாரிப்பில் கோட்டைவிடுவது ஆச்சர்யமாக தான் உள்ளது.

மௌத் டாக்,

பல படங்கள் சரியான ப்ரோமோஷன் இல்லாமலும், அதீத எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியானாலும், படம் நன்றாக இருந்தால் மௌத் டாக் மூலமாக படங்களின் வெற்றி உறுதி செய்யப் படும். அதே போல் இந்த படத்தின் நிலை(மை) என்னவென்று காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஹாஸ்டல் படத்திற்கான நிலையை கீழுள்ள படங்களில் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *