Holy Wound விமர்சனம் – (2.5/5)

ஜானகி சுதீர், அமிர்தா, சபு பிரவுடீன் என வெறும் மூன்று பேர் மட்டுமே நடித்த LGBT திரைப்படம் “Holy Wound”. இப்படத்தை, பாவுல் வீக்லிப் எழுதிய இக்கதையை, அசோக்.ஆர்.நாத் இயக்கியுள்ளார்.

www.ssframes.com என்ற இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.

கதைப்படி..,

சபுவும் – ஜானிகியும் கணவன் மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். மாதவிடாய் காலத்தில் கூட பாலியல் தொல்லை கொடுக்கும் கணவனாக இருக்கிறார் சபு. அந்தக் கொடுமையை பொறுக்க முடியாமல் தவிக்கிறார் ஜானகி. அப்போது, தனது சிறுவயது காதலி அமிர்தாவையும் அவருடனான இருந்த உறவையும் நினைத்துப் பார்க்கிறார் ஜானகி. அதன் பின், அமிர்தாவை தேடிச் செல்கிறார் ஜானகி.

அமிர்தாவை சந்தித்தால் அவர் ஒரு “நன்” – கிருத்துவ மதத்தை போற்றும் கன்னியாஸ்திரி என்று தெரிய வந்ததும் சோகத்தில் மூழ்கிறார் ஜானகி. அதன் பின் அமிர்தாவுடன் இணைந்தாரா? கணவன் என்ன ஆனார்? என்பது மீதிக்கதை…

18+ படம் என்பதால், ஆங்காங்கே சில லெஸ்பியன் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். பாலியல் துன்புறுத்தல் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.

மேலும், மிக மிக குறைவான வசனங்கள் தான் படத்தில். பின்னணி இசை மட்டுமே படம் முழுக்க பயணம் செய்யும். LGBT படம் என்பதால் திரையரங்கில் திரையிட ஒப்புதல் அளிக்கப் படவில்லை. டீசண்டான திரைக்கதையும், கதையும் கூட.

CBFC சான்றிதழ் வழங்கிய ஒரு திரைப்படத்தை புறக்கணிக்க எந்த அவசியமும் இல்லை.

சர்ச்சையான விஷயம் என்றால் கன்னியாஸ்திரிக்கு வேறு மாதிரியான எண்ணங்கள் தோன்றுமா? என்பது தான்.

மலையாள திரையுலகத்தில் இருப்பதால் இப்படியான ஒரு கதையை எடுக்கவோ எழுதவோ இயக்குனருக்கும், எழுத்தாளருக்கும் தைரியம் தான்.

அழகான இயற்கை காட்சிகளை ரசிப்பதற்கு ஒருமுறை இப்படத்தை பார்க்கலாம்.

HOLY WOUND – சராசரி மனிதர்களின் உணர்வு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *