அதிமுக தேர்தல் அறிக்கை :
திமுக தேர்தல் அறிக்கை நேற்று வெளியான நிலையில் இன்று அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இருவரும் சென்னையில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். முக்கிய அம்சமாக அம்மா வாஷிங் மெஷின், அனைவருக்கும் வீடு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக நேற்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பல அம்சங்கள் இடம் பெற்று அதற்கு வரவேற்பும் கிடைத்துள்ளது.
அதிமுக இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதைவிட அதிக ஸ்கோர் செய்யும் வகையில் அதில் அறிவிப்புகள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக தேர்தல் அறிக்கையில் வந்துள்ளது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு:
அம்மா வாஷிங் மெஷின் திட்டம்
அனைவருக்கும் வீடு- அம்மா இல்லம் திட்டம்
மகளிருக்கு பேருந்துச் சலுகை
தொலை நோக்கு திட்டம் 2023
ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் திட்டம்
உணவு மானியம்
அனைவருக்கும் சூரிய சக்தி சமையல் அடுப்பு
கல்விக்கடன் நீட் பயிற்சி மையம்
வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை
முதியோர் ஓய்வூதிய திட்டம் 2000 ஆக உயர்வு
திருமண உதவி திட்டம் உயர்வு
கொசுவலை வழங்கும் திட்டம்
மத்திய அரசுப்பணியில் மாநிலத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை
தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம்
எழுவர் விடுதலை
நீதிமன்றத்தில் தமிழ்