ஃபாரின் சரக்கு திரைவிமர்சனம் – (3.25/5)

நெப்டியூன் செய்லர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கோபிநாத் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ்வரன் கருப்புச்சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஃபாரின் சரக்கு’. முழுக்க முழுக்க புதுமுக நடிகர், நடிகைகள் நடித்துள்ள இப்படம் வரும் ஜூலை 8 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

கதைப்படி..,

குஜராத் மினிஸ்டரின் மகன் தொடர்ந்து பெண்களை கற்பழித்து கொலை செய்தும் வருகிறார். மேலும், குஜராத் ஐ.ஜின் மகளை கற்பழித்து விட படம் சூடு பிடிக்கிறது.

தக்க ஆதாரங்களுடன் அமைச்சரின் மகன் சிக்கிக் கொள்ள அவரை காப்பாற்றி வெளிநாடு அனுப்ப முடிவு செய்கிறார் அமைச்சர். இந்த விஷயத்தை அறிந்த அமரன் தலைமையிலான போலீஸ் குழு அமைச்சர் மகன் “ஃபாரின் சரக்கை” கண்டுபிடித்தார்களா? அவர்கள் நிஜ போலீஸ் குழு தானா? என்பது மீதிக்கதை…

கதைக்களத்தை மிக சிறப்பாக தேர்வு செய்துள்ளார் இயக்குனர். தெளிவான சிந்தனையுடனும் இயக்கியுள்ளார். விக்னேஸ்வரனின் இயக்கம் அவருக்கு இது முதல் படம் என்பதை எங்கும் வெளிக்காட்டியிருக்காது. “ஃபாரின் சரக்கு” மற்றும் லீட் கொடுத்த “லோக்கல் சரக்கு” இரண்டும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இப்படத்தை தயாரித்து, அமரன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கோபிநாத் புது முகம் என்பதால் அவரின் நடிப்பு அமெட்சூராக தான் இருந்தது. அடுத்தடுத்த படங்களில் அவரின் நடிப்பை சரி செய்துகொள்வார் என்று நம்புவோம்.

மூன்று ஹீரோயின்களும் அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தின் வலுவை அறிந்தும், புரிந்தும் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இசையில் பிரவீன்ராஜ் இசையை படத்திற்கு ஏற்றவாறு அமைந்திருந்தாலும். படம் முழுக்க இசை பயணிப்பதால் அங்கங்கு சலிப்பு தட்டுகிறது.

சண்டை காட்சியில் புது முயற்சி செய்துள்ளது படக்குழு. வெறும் 98 நிமிடங்கள் கொண்ட ஒரு கதை என்பது படத்திற்கு கூடுதல் பலம்.

புதிய டீம் என்றாலும் மேக்கிங்கிள் ஒரு கலக்கு கலக்கிவிட்டார்கள். திரைக்கதையில் மட்டும் சிறு கவனம் செலுத்தியிருந்தால் படம் விறுவிறுப்பு குறையாமல் இருந்திருக்கும்.

படத்தின் இறுதியில் அழகான மெசேஜ். பெற்றோர்களுக்கும் பல கார்ப்ரெட் நிறுவனங்களுக்குமான ஒன்று.

ஃபாரின் சரக்கு – போதையில்லா சரக்கு

One thought on “ஃபாரின் சரக்கு திரைவிமர்சனம் – (3.25/5)

  • July 7, 2022 at 7:10 PM
    Permalink

    வெற்றி பெற வாழ்த்துக்கள்…👍

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *