தித்யா பாண்டே, நாகேந்திர பிரசாத், சின்னி பிரகாஷ், விவேக் ஜோக்தாண்டே, மீதா ரகுநாத், ஸ்ரீ ராம் நடிப்பில், ஏ.எல்.விஜய், பிரசன்னா ஜே.கே., மிருதுளா ஸ்ரீதரன் இயக்கத்தில் உருவாகி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இணையத்தொடர் “ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்”. முழுக்க முழுக்க நடனத்தை மட்டுமே மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள தொடர் இது.
ஏ.பி.சி.டி., ஏ.பி.சி.டி.-2, லக்ஷ்மி வரிசையில் “ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்” இணையத்தொடராக உருவாகியுள்ளது.
கதைப்படி,
நடுத்தர வர்க்கத்தில் இருக்கும் சில டீனேஜ் சிறுவர்கள் நடன போட்டியில் கலந்து கொண்டு சாதிப்பது தான் கதை.
ஏ.எல். விஜய் இதே கதையில் ஏற்கனவே பிரபு தேவா மற்றும் தித்யா நடிப்பில் வெளியான “லக்ஷ்மி” படத்தின் கதையை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து முழு நீள தொடராக மாற்றியுள்ளார் ஏ.எல். விஜய்.
கஷ்டபடும் குடும்ப பின்னணியில் வாழும் சிறுவர்கள் அவர்களின் ஆசை லட்சியமான நடனத்தில் சாதிக்க துடிக்கிறார்கள் அதற்கு வரும் தடைகளை தகர்த்தெறிந்தார்களா? ஜெயித்தார்களா? என்பது தான் கதை.
தித்யா சாகர் பாண்டே, சின்னி பிரகாஷ், விவேக் ஜோக்தாண்டே மூவரின் நடிப்பும் நடனமும் சிறப்பு. உண்மையில் அவர்களின் நடிப்பை விட நடன திறமை அட்டகாசமாக இருக்கிறது. தொடரை காப்பாற்றுவதும் தான் அது தான்.
தொடரில் வரும் நடனகாட்சிகள் ஒவ்வொன்றும் அட்டகாசம். நடன போட்டிகள் அட்டகாசமாக படமாக்கப்பட்டுள்ளது. ஆனால் தொடரின் திரைக்கதை தொய்வாக இருக்கிறது. நடனம் தவிர வரும் காட்சிகள் எதுவும் சுவாரஸ்யமாக இல்லை. துணை கதாப்பாத்திரங்களில் வரும் நடிகர்களின் நடிப்பும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.
மாஸ்டராக நாகேந்திர பிரசாத் கொஞ்சம் மிடுக்கு, கொஞ்சம் கண்டிப்பு என அவரது நடிப்பு கவர்கிறது. நடனம் உங்களுக்கு பிடிக்குமெனில் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.
ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட் – கொஞ்சம் ஸ்லோ. பட், நல்ல ஃப்லோ.