‘மாஸ்டர்’ மூன்றாவது பார்வை போஸ்டரால் ரசிகர்கள் உற்சாகம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ் உள்ளிட்டோர் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் மூன்றாவது பார்வை வெளியாகியுள்ளது. முதல் இரண்டு போஸ்டர்களில் விஜய் மட்டுமே இருந்தார். இந்நிலையில் மூன்றாவது போஸ்டரில் விஜய்யும், விஜய் சேதுபதியும் பயங்கரமாக மோதிக் கொள்ளும் போஸ் கொடுத்துள்ளார்கள்.

விஜய்க்கு வில்லன் விஜய் சேதுபதி என்பதாலேயே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. போஸ்டரை பார்க்கும் போது அந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. போஸ்டரை பார்த்த ரசிகர்களும் சரி, திரையுலக பிரபலங்களும் சரி படத்தை பார்க்க ஏப்ரல் மாதம் வரை காத்திருக்க வேண்டுமா என்று தெரிவித்துள்ளனர்.

விஜயும், விஜய் சேதுபதியும் கொடுத்துள்ள போஸை பார்த்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

‘மாஸ்டர்’ படம் குறித்து எதுவும் சொல்லாமல் லோகேஷ் கனகராஜ் அமைதியாக வேலை பார்ப்பது விஜய் ரசிகர்களுக்கு மனவேதனையாக இருந்தாலும் படம் நிச்சயம் வேற லெவலில் இருக்கும் என்று நம்புகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *