‘வெள்ளையானை’யின் “வெண்ணிலா” பாடலை வெளியிட்ட தனுஷ்!

‘வெள்ளையானை’ படத்திலிருந்து முதல் பாடலான “வெண்ணிலா” பாடலை வெளியிட்ட தனுஷ் !

சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி, யோகிபாபு, ஆத்மியா நடிப்பில் உருவாகிவரும் “வெள்ளையானை” படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசைமைக்கிறார். மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் S.வினோத் குமார் தயாரிக்கிறார்.

முழுக்க முழுக்க விவசாயம் சம்மந்தப்பட்ட திரைப்படமான இந்த படத்தில் E.ராமதாஸ், மூர்த்தி (இயக்குனர்), SS ஸ்டான்லி, பாவா செல்லதுரை, ‘சாலை ஓரம்’ ராஜு, சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தற்போது இந்த படத்திலிருந்து ” வெண்ணிலா “ எனும் முதல் பாடலை நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். உமா தேவி பாடல் வரிகளை எழுதியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசைமைத்துள்ளார். விஜய் நரேன் & சங்கீதா கருப்பாயா ஆகியோர் பாடியுள்ளனர்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

தொழில்நுட்பக்குழு :
எழுத்து -இயக்கம் : சுப்ரமணியம் சிவா
தயாரிப்பு – S.வினோத்குமார் – மினி ஸ்டூடியோ
இசை – சந்தோஷ் நாராயணன்
கலை இயக்கம் –  ஆ.ஜெகதீசன்
ஒளிப்பதிவு – விஷ்ணு ரங்கசாமி
சண்டைப்பயிற்சி -தினேஷ் சுப்பராயன்
ஆடை வடிவமைப்பு – நாகு
மேக்கப் – A.சரவணகுமார் , B. ராஜா
பாடல்கள் – இயக்குனர் ராஜு முருகன், உமா தேவி, அறிவு, அந்தோனி தாசன்
விளம்பர வடிவமைப்புகள் – சசி & சசி

மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *