சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், சூர்யா, வினய் ராய், பிரியங்கா மோகன், சத்யராஜ், சூரி, ரெடின் கிங்ஸ்லி நடிப்பில், டி.இம்மண் இசையில் உருவாகி இன்று வெளியான படம் ‘எதற்கும் துணிந்தவன்’.
முதல் காட்சியில் 7 கொலைகளை சூர்யா செய்ய படம் விறுவிறுப்பான காலத்துடன் நான்-லீனியர் கதையாக துவங்குகிறது. வடநாடு, தென்னாடு என இரு ஊரும் மிகவும் ஒற்றுமையாக இருந்து வர ஒரு பெண்ணின் தற்கொலையால் இரு ஊருக்கும் பிரச்சனை வர இரு ஊரும் பேச்சு வார்த்தையின்றி இருக்கிறது. பிறகு, தன் ஊரான வடநாட்டில் மிகுந்த செல்வாக்கை பெற்றிருக்கும் வினய் தனது மனைவியை கொன்று அவர் தன் வீட்டு டிரைவருடன் ஓடிவிட்டதாக சித்தரித்து விடுகிறார்.
அதன் பின் பல பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி அவர்களை கொலை செய்தும், அவர்களின் தற்கொலைக்கும் காரணமாக இருக்கிறார். இவரை தென்னாட்டில் மரியாதை பெற்றிருக்கும் வக்கீல் சூர்யா இந்த பெண்களின் துன்புறுத்தலின் பின்னணியை எப்படி கண்டுபிடிக்கிறார், அதற்கு அவர் எப்படி தண்டனை வழங்குகிறார்? வினய் என்ன ஆனார்? இரு ஊரும் ஒன்று சேர்ந்ததா? என்பது மீதி கதை…
படத்தின் ஆரம்பம் முதல் இடைவேளை வரை சூர்யா ரசிகர்களுக்கு விருந்து தான். இரண்டாம் பாதி பாதிக்க பட்ட பெண்களின் வலியையும் செண்டிமெண்ட் காட்சிகளையும் தாங்கிப்பிடித்திருக்கும்.
சூர்யா தன் நடிப்பில் கதையின் யதார்த்தத்தையும், வலியையும், ரசிகர்களுக்கு தேவையான மாசையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
வினய் தனது வில்லத்தனத்தை விட்டு கொடுக்கவே இல்லை. கட்சிக்கு கட்சி மிரட்டியுள்ளார்.
பிரியங்கா மோகன் தனது அழகையும், நடிப்பையும் ரசிக்கும் வகையில் காட்சியளித்திருக்கிறார்.
சத்யராஜ், சரண்யா, எம் எஸ் பாஸ்கர், இளவரசு, தேவ தர்ஷினி, சூரி, புகழ், சரண், சிபி சந்திரன், என அனைவரும் அவர்களுக்கு கொடுத்த பாத்திரத்தை கட்சிதமாக நடித்துள்ளனர்.
பொள்ளாச்சி சம்பவத்தை மையமாக கொண்ட ஓரு வலுவான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து அதில் பெண்கள் படும் துன்பங்களையும் பெண்ணின் மனக்குமுறல்களையும் அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். அதே சமயம் அவரின் வழக்கமான குடும்ப கதை பாணியையும் விடவில்லை.
வழக்கமான கமேற்சியால் படத்தில் வருவது போல் ஹீரோயின்களை ரொமான்ஸ் காட்சிகளுக்கு மட்டும் பயன்படுத்தாமல் ஹீரோயினை வைத்தே இரண்டாம் பாதியை நகர்த்தியது படத்திற்கு கூடுதல் பலம்.
கதையை அவர் நிறைவு செய்த விதம் பிரம்மிக்கும் விதம் படத்திற்கு முக்கிய பங்களிப்பு கிளைமாக்ஸ் காட்சிக்கு தான்.
ரத்னவேலின் ஒளிப்பதிவும், இம்மண் இசையும் படத்தை வேறொரு தரத்திற்கு எடுத்து சென்றிருக்கிறது.
மொத்தத்தில் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் துணிச்சலை வழங்கியிருக்கிறது இந்த ‘எதற்கும் துணிந்தவன்’.
எதற்கும் துணிந்தவன் – நடைமுறையில் இயலாத ஒன்றை திரையில் பார்த்த திருப்தி.