டூடி விமர்சனம் – (3.5/5)

 

கார்த்திக் மதுசூதன், ஸ்ரீதா சிவதாஸ், ஜீவரவி, அர்ஜுன் மணிகண்டன், அக்ஷதா, எட்வின் ராஜ் மற்றும் பலர் நடிப்பில், கார்த்திக் மற்றும் சாம்.ஆர்.டி.எக்ஸ் இயக்கத்தில் உருவான படம் “டூடி”. கனெக்டிங் டாட்ஸ் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

கதைப்படி..,

பப்பில் இசை வாசித்தும் அங்கு வரும் பெண்களுடன் சுற்றித்திருந்து பெங்களூருவில் 33 வயது வாலிபனாக, வலம் வருகிறார் நாயகன் கார்த்திக். காதல் மீதும், கல்யாணம் மீதும் நீண்டகால ரிலேஷன்ஷிப் மீதும் நம்பிக்கை இல்லாத ஒருவர் தான் கார்த்திக்.

ஒருநாள் நண்பனின் கல்யாணத்தில், ஸ்ரீதாவை சந்தித்து அவருடனும் ஃபிளர்ட் செய்கிறார். பின்னர் கார்த்திக் மீது காதல்வசப்படுகிறார் ஸ்ரீதா. எதிர்பார்த்தது போலவே, அந்தக் காதலை ஏற்கமறுக்கிறார் கார்த்திக். சில நேரத்தில் ஸ்ரீதா மீது காதல் வர.

அப்போது, நான் 5 வருடங்களாக ஒருவரை காதலித்து வருகிறேன் என்கிறார் நாயகி. அதன் பின் என்ன ஆனது? இருவரும் இணைந்தார்களா? இருவருக்கும் உள்ள பிளாஷ்பேக் என்ன? என்பது மீதிக்கதை…

வாழ்க்கையின் மேல் ஒரு பயம் இல்லாமல், தன் ஆசைகளுக்கிணங்க வாழ்த்துக் கொண்டு. பெங்களூரு வாழ்க்கையை வாழும் வாலிபனாக கதாபாத்திரத்தில் ஒன்றி வாழ்ந்திருக்கிறார் கார்த்திக். நிஜமாகவே கார்த்திக்கு இது முதல் படம் தானா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழும் அப்படியான யதார்த்த உடல்மொழியும் நடிப்பும்.

பலவித எமோஷன்களை கொண்ட ஒரு பாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீதா அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறார்.

கார்த்திகின் நண்பன் கதாபத்திரத்தில் நடித்துள்ள அர்ஜுன் மணிகண்டனுக்கு பெரிய ஸ்பேஸ் இல்லை என்றாலும், நடித்திருந்த காட்சிகள் அனைத்தும் அளவான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளார். உடன் நடித்திருக்கும் கலைஞர்களும் கச்சிதமாக நடித்துள்ளனர்.

பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் ரகம். பின்னணி இசையில் ஓகே. இசையமைப்பாளராக அறிமுகமாகும் கே.சி.பலசாரங்கனுக்கு வாழ்த்துக்கள்.

மது சுந்தர்ராஜின் கேமரா ஒர்க் சூப்பர்.

டப்பிங்கில் சிங்க் இல்லை. ஆனால், அதுவும் குறையாக தெரியவில்லை.

டூடி – யதார்த்த காதல் கதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *