டான் பட பத்திரிகையாளர் சந்திப்பின் சிறப்பு தருணங்கள்

லைகா ப்ரோடுக்ஷன்ஸ் மற்றும் எஸ்கே ப்ரோடுக்ஷன்ஸ் இனைந்து தயாரித்திருக்கும் படம் “டான்”. இப்படத்தை வரும் மே மாதம் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ரெட் ஜெயிண்ட்ஸ் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் இப்படத்தில், சிவ கார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, ராதா ரவி, மிர்ச்சி விஜய், ஷிவாங்கி, பால சரவணன் மற்றும் பலர் நடிப்பில் “டான்” படம் வெளியாகிறது.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது படக்குழுவினர் பேசியதாவது:

பாடகி/நடிகை ஷிவாங்கி பேசியபோது,

இன்று நான் சிறிது குறைவாக பேச முயற்சிக்கிறேன், டான் எனக்கு முதல் படம். முதல் படத்தில் மிக பெரும் நடிகர்களுடன் நடிப்பது எனக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பு. கொரோனா காலகட்டத்தில் என்னால் கல்லூரிக்கு செல்ல முடியவில்லை. டான் படத்தின் மூலம் எனக்கு கல்லூரி அனுபவம் கிடைத்தது.

என்னுடைய முதல் படம் இது, இதில் நான் எந்த அளவு சிறப்பாக நடித்திருக்கிறேன் என்று தெரியவில்லை. ஆனால் இதுவரை மக்கள் எனக்கு கொடுத்த வரவேற்பையும், ஆதரவையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். என்றார்.

நடிகர் பால சரவணன் பேசியபோது,

இயக்குனர் சிபி சக்ரவர்த்தி, தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. இந்த டான் படம் மூலமாக தான் நான் என் உடலை குறைக்கும் வாய்ப்பு கிடைத்தது. உடம்பை குறைத்த பின் படங்களின் வாய்ப்பு அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. 80ஸ், 90ஸ், 2கே கிட்ஸ் அனைவர்க்கும் இப்படம் பொருந்தும். அனைவரும் படத்தை பார்த்து மகிழுங்கள் என்றார்.

நடிகை ப்ரியங்கா மோகன் பேசியபோது,

டான் படம் குடும்பங்கள் விரும்பக் கூடிய படம், உங்களின் அன்பும் ஆதரவும் எனக்கு தேவை, எனது சினிமா வாழ்க்கை இப்போது தான் துவங்கியிருக்கிறது. அனைவரும் படத்தை திரையரங்கில் கண்டு மகிழுங்கள் என்றார்.

இயக்குனர் சிபி சக்ரவர்த்தி பேசியபோது,

சிவ கார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி, என்னை நம்பி முதல் வாய்ப்பு கொடுத்துள்ளார். லைகா சுபாஷ்கரன் சார் அவர்களுக்கு நன்றி. இந்த படத்தில் காமெடி, செண்டிமெண்ட் என அனைவரும் பார்க்க கூடிய படம் தான் இது. இந்த படத்தை பார்த்து விட்டு நாங்கள் நல்ல படம் எடுத்துள்ளோம் என்று பாராட்டினால் அது தான் எங்களுக்கு வெற்றி, நன்றி என்றார்.

நடிகர் சிவகார்த்திகேயன் பேசியபோது,

இது நம்மை பற்றிய கதை, நாம் மறந்த விஷயத்தை, நாம் வெளிக்காட்டாத உணர்வை வெளிப்படுத்தும் விதமாக இப்படத்தை அமைத்துள்ளோம். இது வரை சினிமாவில் சொல்லாத கதை என்றெல்லாம் இது கிடையாது. ஆனால், ஒரு சில காட்சிகள் புதுமையாக வைத்துள்ளோம்.

கல்லூரி பருவத்தில் ஒருவன் தன்னை டானாக உணர்கிறான் அவன் எதனால் அப்படி உணர்ந்தான் என்று பல காரணங்களுடன் இப்படம் முடியும்.

அனைவரையும் மே 13ம் தேதி திரையில் சந்திக்கிறேன். நன்றி என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *