சினிமா துறையை விட்டு விலகுவாரா? ஆர் கே சுரேஷ்

நடிகர்/ தயாரிப்பாளர்/ விநியோகிஸ்தர்/ சென்சார் போர்டு உறுப்பினர் என பல துறைகளில் வெற்றியடைந்தவர் திரு ஆர் கே சுரேஷ். இவர் ஹீரோவாக நடித்த பில்லா பாண்டி, வன்முறை, வேட்டை நாய் போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை.

ஆனால், தயாரிப்பாளராக சலீம், தர்ம துரை போன்ற படங்கள் இவரை சினிமாத் துறைக்கு ஒரு முக்கியப் பிரபலமாக அடையாளப்படுத்தியது. தம்பிகோட்டை, அட்டு ஆகிய படங்கள்ளுக்கும் போதிய அளவு வரவேற்பில்லை. இவருடைய ஸ்டூடியோ 9 நிறுவனம் விநியோகம் செய்த சாட்டை, பரதேசி, சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா, தங்க மீன்கள் போன்ற படங்கள் தரமான படங்களின் பட்டியலில் சேரும்.

தற்போது வந்த சோதனை:

ஆர் கே சுரேஷ் நடிப்பில் இயக்குனர் பாலாவின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் “விசித்திரன்”. மலையாளத்தில் மிகவும் வலிமையான வலியை மையக் கருவாகக் கொண்டு 2018ஆம் ஆண்டு வெளியான “ஜோசப்” படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் தான் இந்த படம். இந்த படத்திற்கு இது வரை எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், ஆர் கே சுரேஷுக்கு தான் பிரச்சனை.

சமீபத்தில் நடந்த “மாயன்” படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நடிகர் ஆர் கே சுரேஷ் உடலமைப்பை கேலிசெய்யும் விதமாக விமர்சிக்கும் விமர்சகர்களை பற்றி மிகவும் ஆவேசமாக பேசினார். அப்போது பேசிய அவர், “நான் விசித்திரன் என்று ஒரு படத்தை உருவாக்கியுள்ளேன். அந்த படம் நன்றாக இல்லை என்று சொன்னால் நான் சினிமாவை விட்டு விலகிவிடுவேன்” என்று கூறினார்.

அவர் அப்படி சொன்னதன் காரணம்,

என்ன காரணமாக இருக்கும் என சிந்தித்தால், அவரின் மீது அவர் வைத்துள்ள தன்னம்பிகை என்றே கூறலாம்.எனவே,அவர் கூறியது போல் படம் நன்றாக இருந்து நல்ல விமர்சனங்களை பெற்றால் அவரின் சினிமா பயணம் தொடரும். இல்லையெனில், சொன்ன வாக்கை காப்பாற்றுவாரா? இல்லையா? என்று அவருக்கு தான் வெளிச்சம். அவரின் சினிமா வாழ்க்கையை தொடருவாரா?மாட்டாரா? என்பதை படம் வெளியாகும் வரை காத்திருந்து பார்க்கலாம்.

இருப்பினும் அவர் தன்னம்பிக்கை வெற்றியடைய வாழ்த்துவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *