திமுகவின் “மாஸ்டர்” பிளான்! – ரிசர்வ் தொகுதிகளை மொத்தமாக கைப்பற்றுமா?

ரிசர்வ் தொகுதிகளை மொத்தமாக கைப்பற்ற திமுகவின் “மாஸ்டர்” பிளான்!

தமிழக சட்டசபை தேர்தலில் ஆட்சியை தீர்மானிக்கும் முக்கிய சக்தியே ரிசர்வ் தொகுதிகள்தான்.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 44 தொகுதிகள் பட்டியல் இனத்தவருக்கான தனித் தொகுதிகள்.

ஆட்சிக்கு 118 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி சுலபத்தில் ஆட்சி அமைக்கும்.

ஆக ஆட்சிக்கு தனித் தொகுதிகளான 44 இடங்களும் மிக முக்கியமானவை. அதில் இதுவரை திமுகவை விட அதிமுகவே அதிகம் தொகுதிகளை ஒவ்வொரு தேர்தல்களிலும் கைப்பற்றி வருகிறது.

ரிசர்வ் தொகுதிகளில் திமுக அதிக கவனம் செலுத்தாமல் போனதற்கு காரணம் புரியாமல் போன உ.பி.க்களுக்கு இப்போது உற்சாக செய்தி கிடைத்து இருக்கிறதாம்.

திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பொறுப்பேற்ற நாள் முதல் தனித் தொகுதிகளில் அதிக கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறது திமுக.

அதிமுக பாணியை மிஞ்சும் விதமாக ரிசர்வ் தொகுதிகளில் தேர்வு செய்யப்படும் வேட்பாளர்கள் அனைவரும் முழுமையான பட்டியல் இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பதில் மிக கவனமாக இருக்க முடிவு செய்து இருக்கிறதாம்.

இந்த முடிவுக்கு திமுக வந்ததற்கு பல காரணங்கள் இருந்தாலும் உதாரணமாக இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 2 ரிசர்வ் தொகுதிகள் கடந்த தேர்தலிக் கை நழுவியதற்கு தவறான வேட்பாளர் தேர்வுதான். கே.வி.குப்பம் தொகுதியில் அம்முலு என்பவரும், அரக்கோணம் தொகுதியில் பவானி வடிவேலு என்பவரையும் தலைமை அறிவிக்க தொகுதிகளில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. இதற்கு காரணம் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் இருவரும் பட்டியல் இனத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களின் கணவர்கள் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள்.
ஏற்கனவே இந்த பகுதிகளில் இந்த இரு சமூகத்தினர் இடையே எப்போதும் உரசல் முட்டல் மோதல் இருந்து கொண்டே இருக்கும்.

இதனால் தான் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது அதன் காரணமாக அரக்கோணம் தொகுதியில் மட்டும் வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டார். அப்படியிருந்தும் அந்த தொகுதிகளில் தோல்விதான் கிடைத்தது.

அதை மிக தாமதமாக புரிந்து கொண்ட தலைமை இந்த முறை அப்படி எந்த மிஸ்டேக்கும் நடக்க கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கிறது.

மொத்தமுள்ள 44 தொகுதிகளையும் கைப்பற்ற தீவிரமான மாஸ்டர் பிளான் போட்டு அதன்படி வேட்பாளர் தேர்வும் மிக ரகசியமாக நடத்திக் கொண்டு இருக்கிறது திமுக தலைமை.

அரக்கோணம் தொகுதியை பொறுத்தவரை “6 கோணம் உள்ள தொகுதி அரக்கோணம்” என உட்கட்சி கோஷ்டிகளை மனதில் வைத்து திமுக தலைவர் கருணாநிதி நையாண்டி செய்வாராம்… அப்படி 6 கோணம் கொண்ட அரக்கோணத்தில் கண்டிப்பாக திமுக வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உ.பி.க்கள் இப்போதில் இருந்தே மிக உற்சாகமாக தேர்தல் வேலைகளை செய்து வருகிறார்கள். அவர்களை குஷி படுத்தும் விதமாக எந்த கோஷ்டியிலும் சிக்காத புதிய வேட்பாளரை களம் இறக்க திமுக தலைமை முடிவு செய்திருக்கிறதாம். அந்த வகையில் மாவட்ட வழக்கறிஞர் அணியின் துணை அமைப்பாளர் எழில் இனியனுக்கு யோகம் அடிக்கிறதாம்.
காரணம், சிட்டிங் எம்.எல்.ஏ.ரவியை எதிர்த்து பண பலத்திலும், படை பலத்திலும் வக்கீல் எழில் இனியன் மிக பலமாக இருப்பதால் தொகுதியில் எடுக்கப்பட்ட சர்வேக்களிலும் இவர் பெயரே பலமாக ஒலிக்கிறதாம்.

அரக்கோணம் திமுக கோட்டையானால் ஆட்சியும் நம்முடையதுதான் என அரக்கோணம் செண்டிமெண்ட் தெரிந்த உ.பி.க்கள் உற்சாகத்தில் திளைக்கிறார்களாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *