சந்தானம், அனகா, ஷிரின், யோகிபாபு, ஷா ரா, ராஜேந்திரன், நிழல்கள் ரவி, முனீஷ்காந்த், ஆனந்த் ராஜ், இவர்களுடன் சிறப்பு கதாபாத்திரத்தில் ஹர்பஜன் சிங் நடித்துள்ள இப்படத்தை, யுவன் ஷங்கர் ராஜாவின், மிரட்டலான இசையுடன், இயக்கியுள்ளார் கார்த்திக் யோகி. ‘இன்று நேற்று நாளை’, ‘ஓ மை கடவுளே’ வரிசையில் இதுவும் ஒரு டைம் ட்ராவல் படமாக அமைந்துள்ளது, ‘நிழல்கள்’ ரவியின் எடுத்துரைப்பில் துவங்கும் இந்த கதை 2027ல் நகரும் வேளையில், தனது திருமண வாழ்க்கையை மாற்ற நினைக்கும் சந்தானம் தனது நண்பர் யோகி பாபுவின் உதவியுடன் 2020க்கு சென்று அதை மாற்றியும் அமைத்து, பிரியா கதாபாத்திரத்தில் நடித்து வந்த அனகாவை விட்டுவிட்டு, மேகனா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷிரினுடன் கைகோர்க்கிறார் மணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சந்தானம். அவர் மாற்றியமைத்த பின் அவரின் வாழ்வில் இடி மின்னல் மழை அவர் செய்தது ஒரு பிழை என உணருகிறார். தனது பிழையை சரி செய்தாரா? செய்திருந்தால் அதை எப்படி செய்தார்? என்பது படம்.
சந்தானத்தின் நடிப்பு முந்தைய படங்களை விட நன்றாக உள்ளது. யோகிபாபு மற்றும் முனீஸ்காந்தின் காமெடி படத்தை வேகமாக நகரச் செய்துள்ளது.
டிக்கிலோனா – நகைச்சுவையில் நிறைந்திருக்கிறது
– நிதிஷ்