அருள்நிதியின் டைரிக்கு பெரும் வரவேற்பு

 

நடிகர் அருள்நிதி நடிப்பில் சமீபத்தில் அடுத்தடுத்து வெளியான “டி பிளாக், தேஜாவு” படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்த நிலையில், தனது அடுத்த படத்தின் ரிலீஸுக்கு பரபரப்பாக தயாராகி விட்டார் அருள்நிதி. அவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள “டைரி” படத்தை Five Star Creations LLP  சார்பில்  S கதிரேசன் தயாரிப்பில்  இன்னாசி பாண்டியன் இயக்கியுள்ளார்.  2.25 நிமிடங்கள்  ஓடும் இப்படத்தின் டிரெய்லர்  இப்படம் புதுவிதமான  திரைக்கதையில் ரசிகர்களை இருக்கை நுனியில் வைத்திருக்கும் திரில் பயணம் என்பதை உறுதி செய்துள்ளது.

இபடத்தின் டிரெய்லர் வெளியீடு இந்தியாவின் மிகப்பெரும் பிரபலங்களான கமல்ஹாசன், விக்ரம், அமீர் கான் உடன் மேலும் பலர்  கலந்து கொண்ட விழாவில் சமீபத்தில் நடந்தேறியது. “டைரி” டிரெய்லர் வெளியான வேகத்தில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதில் படக்குழு உற்சாகமாக உள்ளது.

https://youtu.be/GV6Kg6GVmig

2022 தொடர்ந்து பல வெற்றிப்படங்களை தந்த Red Giant Movies உதயநிதி ஸ்டாலின் இப்படத்தை வெளியிடுகிறார். படத்தின்  திரையரங்கு வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும்.

இன்னாசி பாண்டியன் எழுதி இயக்கியிருக்கும் டைரி திரைப்படத்தில் அருள்நிதி மற்றும் பவித்ரா மாரிமுத்து ஆகியோர் முதன்மை  கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜெயபிரகாஷ், ஷிவா ஷஹ்ரா, சாம்ஸ், நக்கலைட்ஸ் தனம் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *