க்ரவுனி செலிப்ரேஷன்ஸ் – 40 ஆண்டுகளைக் கடந்து விருந்தோம்பல் துறையில் சேவை

க்ரவுனி பிளாசா சென்னை அடையாறு பார்க், வெட்டிங் வோவ்ஸ் இதழ் இணைந்து இதுவரை கண்டிராத கொண்டாட்டத்தை நடத்த இருக்கின்றன. சென்னையிலுள்ள முதல் அடையாளங்களில் ஒன்றாகப்புகழ்பெற்ற இந்த ஹோட்டல், 40 ஆண்டுகளைக் கடந்து விருந்தோம்பல் துறையில் சேவை வழங்கிவருகிறது. சென்னை நகரத்தின் அடையாளக் கொண்டாட்டங்களை நடத்துவதற்கு அதிகம் நாடப்படும் இடமாக இப்போதும் இது திகழ்கிறது.

க்ரவுனி செலிப்ரேஷன்ஸ்‘ எனப்படும் ஆண்டு நிகழ்வுக்காகத் தொழில் துறையில் நிபுணத்துவம் கொண்ட நிறுவனங்கள் கைகோர்க்க உள்ளன. இந்த ஒரு நாள் நிகழ்வில் புதிய உள்நாட்டு நகைகள், ஆடையலங்காரம், பரிசுப்பொருள்கள் அறிமுகப்படுத்தப்படுவதுடன், இவற்றை முழுமையாகவும் நேரடியாகவும் கண்டு உணரவும் முடியும். இந்த நிகழ்வில் எக்ஸ்குளூசிவான வியானா லக்ஸ் டைமண்ட்ஸ் முதன்முறையாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. அதற்கு முன்னதாக எக்ஸ்குளூசிவ் திருமண ஆடையலங்கார ஷோ நடைபெற இருக்கிறது. இதில் மதிப்புமிக்க டிசைனர்கள் கீது நாயுடு, அர்சிதா நாராயணம் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வை மும்பையைச் சேர்ந்த செலிப்ரிட்டி-திருமண டிசைனர் அர்ச்சனா கோச்சார் வடிவமைக்கிறார். இளம் தம்பதிகளும், திருமணம் ஆகப் போகிறவர்களும் தங்களுடைய தனித்துவ ஆடையலங்காரத் தேவைகளுக்கு இந்த முன்னணி டிசைனர்களுடன் நேரடி மாஸ்டர்கிளாஸில் தனித்தனியாகப் பங்கேற்கலாம். இதற்கு இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.

பாரம்பரிய, நவீனக் கொண்டாட்டங்களை நடத்துவதற்கு எப்போதுமே தயாராக இருக்கும் சென்னையில், திருமணச் சந்தை என்பது உருப்பெற்றுவருகிறது. அந்தச் சந்தை எப்படியிருக்கப் போகிறது என்பதற்கான முன்னோட்டமாக 2021 டிசம்பர் 15 நடைபெறும் மாஸ்டர் நிகழ்வு அமையும். பிரபலங்களின் கூடுகையாக இருக்கும் இந்த நிகழ்வில் முக்கியஸ்தர்கள், பிரபலங்கள், உயர்தட்டு வர்க்க வாடிக்கையாளர்கள், சமூகப் பிரபலங்கள், திருமண ஆடையலங்கார டிசைனர்கள், சென்னையின் அடையாள நபர்கள் பங்கேற்பார்கள். சிறப்பு நிகழ்ச்சிகள், திருமணங்கள், கொண்டாட்டங்களை நடத்துவதற்கு உகந்த க்ரவுனி பிளாசா சென்னையின் புதுப்பிக்கப்பட்ட பால்ரூம்கள், அத்துடன் இணைந்த சிறப்பு உணவு வகைகளும் இந்த நிகழ்வில் கவனம் பெறும்.

இந்த ஒரு நாள் கொண்டாட்ட நிகழ்வின் முக்கிய அம்சம், டாக்டர் சுஷ்மிதாவின் பிரீமியம் டைமண்ட் நகை பிராண்டான வியானா டைமண்ட்ஸ் அறிமுகம்தான்.

தனித்தன்மையுடனும் தனிநபரையும் மையப்படுத்திய கொண்டாட்டங்கள், எக்சிகியூட்டிவ் செஃப் மன்ப்ரீத் மாலிக்கின் புதுமையான கொண்டாட்ட உணவு, சிறந்த இடங்கள், அழகுமிகுந்த அலங்காரம், அசத்தும் ஃபேஷனுடன் க்ரவுனி செலிப்ரேஷன்ஸ் உயிர்பெறும். இதற்கெல்லாம் மேலாக ஈடுஇணையற்ற சேவையுடன் இந்த மாபெரும் கொண்டாட்டம் நட்சத்திரங்களின் பங்கேற்பு, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் நடைபெறும். நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திருமண ஆடை வடிமைப்பாளர்களின் 3 சுற்று திருமண, மணப்பெண் ஆடைகளை அணிந்து இந்தியாவின் டாப் மாடல்கள் பங்கேற்கும் இந்த நிகழ்வில் அழைப்பிதழ் இருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.

இந்திய சொகுசு திருமண சந்தையில் சென்னை 2 பில்லியன் டாலருக்கு மேல் பங்களிக்கிறது. அத்துடன் கலைஞர்கள், திட்டமிடுபவர்கள், ஃபேஷன் டிசைனர்கள், திருமண சேவை வழங்குநர்களின் வளர்ந்துவரும் மையமாகவும் சென்னை திகழ்கிறது. உயர்தட்டு வர்க்க வாடிக்கையாளர்கள், ஹை எண்ட் வெட்டிங் தொழில்முறை நிபுணர்கள் ஆகியோரின் ஆரோக்கியமான கலவையாகத் திகழும் சிங்காரச் சென்னை, தற்போது உலகத் திருமண, ஃபேஷன் துறையினரின் கவனத்தைப் பெற்றுள்ளது. ஃபேஷன் உலகத்தின் ரசிகராகவோ, திருமணச் சந்தையில்பங்கேற்பவராகவோ அல்லது இது சார்ந்த புது பிராண்டை உருவாக்குபவராகவோ இருந்தால், நீங்கள் அவசியம் வர வேண்டிய கொண்டாட்டம் க்ரவுனி செலிப்ரேஷன்ஸ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *