வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமத்தின் கொரோனா நிவாரண உதவிகள்

வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமத்தின் கொரோனா நிவாரண உதவிகள்

கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் வாழும் ஏழை எளியோருக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகிறது.
தமிழகத்தில் ஊரடங்கு தொடங்கியதிலிருந்து இதுவரை பல ஆயிரக்கணக்கான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிவாரணப் பொருட்களில் அரிசி, கோதுமை மாவு, துவரம் பருப்பு, உப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியன அடங்கும்.

வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமத்தின் இந்த முயற்சியால் பல ஆயிரக்கணக்கான ஏழைக் குடும்பத்தினர் பயனடைந்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு, 8056063519 என்னும் அலைபேசியைத் தொடர்பு கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *