ஸ்டாலினை திடீரென சந்தித்த வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.இராமமூர்த்தி!
வன்னியர் கூட்டமைப்பின் தலைவரும், அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சித் தலைவர் சி.என்.இராமமூர்த்தி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
தமிழகத்தில் தேர்தல் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பாமக நிறுவனர் ராமதாசுக்கு நேர் எதிர் கருத்து பேசிவரும் சி.என்.இராமமூர்த்தி திடீரென திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் குறிப்பாக பாமக தரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காரணம் பாமக இப்போது ஆளும் அதிமுக கூட்டணியில் இருந்தாலும் சட்டசபை தேர்தலில் திமுகவுடனும் ரகசிய பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டது.
இந்த சூழலில் சி.என்.இராமமூர்த்தி திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இது குறித்து சி.என்.இராமமூர்த்தியிடம் கேட்டபோது, “மரியாதை நிமித்தமான சந்திப்பு” என்று மட்டும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது திமுக மூத்த தலைவர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆலந்தூர் பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.