தமிழ்நாடு முழுவதும் காட்சிப்படுத்தப்படும்!
டில்லியில் 75வது குடியரசு தினத்தையொட்டி நடக்கவிருந்த அணிவகுப்பில் இந்திய சுதந்திர போராட்டத்தின் வரலாற்றில் தமிழகத்தை முதன்மை படுத்தும் விதமாக தமிழகத்தின் சார்பில் சமர்ப்பிக்க பட்ட திட்டம் இருப்பதால் இந்த திட்டத்தை நிராகரித்ததாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
இதை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தின் திட்டத்திற்கு அனுமதி தரவேண்டும் எனவும், திட்டத்தை நிராகரிபது தமிழர்களின் மனதை புண் படுத்தும் வகையில் இருக்கிறது எனவும். நேரடியாக பிரதமர் இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனவும் கடிதத்தை எழுதியிருந்தார்.
அதை பெரிதும் பொருட்படுத்தாத மத்திய அரசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் “டில்லியில் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாட்டின் ஊர்தி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம்பெறும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.