பல வேடங்களிலும், பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்தும் தவறாது நம்மை சிரிக்க வைத்தவர் “வைகை புயல்” வடிவேலு. என்ன தான் அவரின் பல வசனங்களை நாம் தினமும் பயன்படுத்தி வந்தாலும். இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் இவர் பேசிய வசனங்களை நாம் நினைக்காமல் இருக்க முடியாது. குறிப்பாக, “நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம்”, “அமைச்சரே”, “ஒளி வந்துவிட்டது” என்ற வசனங்கள் என்றும் நீங்கா நினைவுகள் தான்.
அப்படி பட்ட அருமையான படைப்பை எழுதி இயக்கியவர் சிம்புதேவன். அப்படத்தை S பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் ஷங்கர் தயாரித்தார். மேலும், சில மாதங்களுக்கு முன்பு “இம்சை அரசன் 23ம் புலிகேசி – 2” எடுப்பதற்கான வேலைகள் ஆரம்பமான நிலையில். சில காரணங்களுக்காக அப்படத்தின் வேலைகள் தொடரவில்லை.
இந்த சூழலில் சிம்புதேவன் அடுத்து எந்த அறிவிப்பும் தராமல் பொதுவெளியில் அதிகம் தலைகாட்டாமல் இருந்து வந்தார்.
அதே நேரம் வடிவேலு விட்ட இடத்தை கெட்டியாக பிடித்து கொண்ட யோகிபாபுவுக்கு அதிர்ஷ்டம் என்றே சொல்லலாம்.
தமிழ் சினிமாவில் ஹீரோக்களை விட பிசியாக இருக்கும் யோகிபாபுவும் இயக்குனர் சிம்புதேவனும் சந்தித்து பேசியிருக்கிறார்கள் என்ற தகவல் கோலிவுட்டில் பரவியதுமே அனைவருக்கும் ஆர்வம் தொற்றிக் கொண்டது.
அதுவும் இருவரும் இணையப்போகும் படமும் சரித்திரபடம் எனவும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
அப்ப கண்டிப்பா இம்சைஅரசன் 23ம் புலிகேசி 2.0 ஆக இருக்கும் என்றும் முந்தைய பட்த்தைவிட இதில் யோகிபாபுவை வேறுவிதமாக காட்ட திட்டமிட்டிருக்கிறார் இயக்குனர் என்கிறது சினிமா வட்டாரம்.
இந்த சரித்திர பட்த்தின் மூலமாக இயக்குனர் சிம்புதேவனுக்கு பல சவால்கள் காத்திருக்கிறது. அதில் குறிப்பாக “இம்சை அரசன் என்னால்தான் ஓடியது” என்ற வடிவேலுவின் பில்டப்பை உடைத்து இயக்குனரால்தான் எந்த படங்களும் பேசப்படும் ஓடும் என்ற சூழலை ஏற்படுத்த வேண்டும்.
அடுத்து “இம்சை அரசன்”வடிவேலு போல சாயல் இல்லாமலும் அதே நேரம் யோகிபாபுவுக்கு தனி அடையாளமும் ஏற்படுத்த வேண்டிய கட்டாயமும் இயக்குனர் சிம்புதேவனுக்கு ஏற்பட்டிருக்கிறது.
அடுத்ததாக சரித்திர படமாக இருப்பதால் மெகா பட்ஜெட் ஆகும் அதை சமாளித்து திரும்ப எடுக்கும் சூழலை வியாபாரத்தில் கொண்டுவர வேண்டும்.
ஏற்கனவே இயக்குனர் ஷங்கர் தயாரிக்க வடிவேலு நடிப்பில் இம்சைஅரசன் பார்ட் 2 எடுக்க செட் போட்டு படம் டிராப் ஆனதால் அதற்கு காரணமானவர்களுக்கு திருப்பி பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயமும் சிம்புதேவனுக்கு ஏற்பட்டிருக்கிறது.
தமிழ் சினிமா ரசிகனின் சமீபத்திய போக்கும் தெரிந்து தனக்கு முன் இருக்கும் இத்தனை சவால்களையும் முறியடித்து தெறிக்க விடுவாரா இயக்குனர் சிம்புதேவன்.
“இம்சை அரசன்” வடிவேலுவா?
“யோக அரசன்” யோகிபாபுவா?
என்பதை அறிய சினிமா பிரியர்களின் காத்திருக்க வேண்டும்.