BREAKING NEWS : ‘புதுப்பேட்டை 2’ எடுப்பது உறுதி – இயக்குநர் செல்வராகவன் அறிவிப்பு

‘புதுப்பேட்டை 2’ எடுப்பது உறுதி – இயக்குநர் செல்வராகவன் அறிவிப்பு

தனுஷ், சினேகா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க 2006 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘புதுப்பேட்டை’. படம் தனுஷ் மற்றும் செல்வராகவன் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தனுஷின் நடிப்பு, நடனம் மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் இசை பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில், செல்வராகவன் மற்றும் தனுஷ் ரசிகர்கள் செல்வராகவனிடம் எப்போது ‘புதுப்பேட்டை 2’ எடுக்கப் போகிறீர்கள்?என்று கேள்வி எழுப்பிய வண்ணம் இருந்தார்கள்.

அதற்கு விடையாக தற்போது இயக்குனர் செல்வராகவன் ‘புதுப்பேட்டை 2’ இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதன்படி வரும் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு துவங்கும் எனவும், 2021 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

அடுத்த கோடை விடுமுறை ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *