‘கே.ஜி.எஃப் 2’ படத்தால் தள்ளிப்போகும் ‘பீஸ்ட்’

தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையில் பிரமாண்டமாய் உருவாகியிருக்கும் படம் ‘பீஸ்ட்’.

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டிருக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கள் ‘அரபிக் குத்து’ பாடல் பல சாதனைகளை முறியடித்தது.

இதனை தொடர்ந்து ஏப்ரல் மாதம் 14ம் தேதி இந்த படம் கே.ஜி.எஃப் 2 படத்துடன் மோதவிருந்தது.

கே.ஜி.எஃப் 2 படம் பான் இந்தியா படம் என்பதாலும் அதிக எதிர்பார்ப்பை கொண்ட படம் என்பதாலும் ‘பீஸ்ட்’ படம் 14ம் தேதி வெளியாவதிலிருந்து தள்ளிப்போகிறது என சில செய்திகள் வந்துள்ளது.

மேலும் இந்த படம் ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியாகிறது எனவும் தகவல்கள் பரவுகிறது.

பீஸ்ட் படத்தின் ரிலீஸால் ‘காதுவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகவும் வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *