‘பேட் பாய்ஸ் ஃபார் லைஃப்’ – திரை விமர்சனம்

BAD BOYS FOR LIFE

(ஆங்கிலம் மற்றும் தமிழிலும்)

தயாரிப்பு – Sony Pictures நிறுவனம்
வெளியீடு – 31st ஜனவரி, 2020

காவல்துறை அதிகாரிகள் நகைச்சுவை கலந்த ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட படங்களில் கலக்குவதென்பது சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும்.

1995 ஆம் ஆண்டு வெளியான ‘Bad Boys’ மற்றும் 2003 இல் வெளிவந்த ‘Bad Boys 2’ ஆகிய இரு படங்களிலும், வில் ஸ்மித் மற்றும் மார்டின் லாரன்ஸ் ஆகிய இருவரும் அமெரிக்க நகரான மியாமியின் பின்னணியில் போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் அதில் ஈடுபடும் நபர்களைக் கண்காணித்து கைது செய்யும் பணியில் ஈடுபடும் துப்புதுலக்கும் அதிகாரிகளாக நடித்து அசத்தியிருந்தார்கள்! முதல் படத்தைவிட இரண்டாம் பாகம் அதிகபட்ச வசூலை அள்ளிக் குவித்தது.

இப்போது மூன்றாம் பாகமான ‘Bad Boys for Life’ படத்தின் கதைக்கு வருவோம்!

ஆண்டுகள் உருண்டோடி விட, நம் கதாநாயகர்கள் இருவரும் அதிரடி ஆக்‌ஷன் நடவடிக்கைகளையெல்லாம் தவிர்த்து, அதிகமாக அலட்டிக் கொள்ளாமல் செயல்படும் விதத்தில் பணிபுரிந்து வருகின்றனர். வேலை – ஓய்வு இருவருக்கும் அதிக தூரத்திலில்லை!

இந்நிலையில், ரோமானியாவைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கூட்டமொன்றின் தலைவனான அர்மாண்டோ ஆர்ம்ஸ் (ஜேகப் சிபியோ), இவர்களுடன் இருந்த முன் விரோதம் காரணமாகப் பழிவாங்கும் படலமொன்றினை இவர்கள் இருவர் மீதும் துவக்குகிறான்!

ஓய்வினை நோக்கிப் பயணிக்க எண்ணியிருந்த இருவரும் மீண்டும் ‘களத்தில்’ குதிக்க வேண்டிய கட்டாயம் உருவாகிறது! பிறகென்ன? அதிரடி ஆக்‌ஷன்தான்.

அதில் எல் ஆர்பி (Adil El Arbi) மற்றும் பிலால் ஃபலாஹ் (Billal Fallah) ஆகிய இருவரும் இயக்கியுள்ளனர். லோர்ன் பால்ஃப் இசை அமைத்துள்ளார்.

 

Will Smith as Mike Lowrey in Columbia Pictures’ BAD BOYS FOR LIFE.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *