அரண்மனை-3 படத்தின் இரண்டாவது பாடல் ‘ரசவாச்சியே’ வெளியானது!

சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் அரண்மனை-3 படத்தின் இரண்டாவது பாடல் ‘ரசவாச்சியே’ வெளியானது !

குடும்பங்கள் சிரித்து கொண்டாடும் ஜனரஞ்சகமான  படங்களை இயக்குவதில் சிறந்தவர் சுந்தர் சி. இவர் இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை2 போன்ற பேய் படங்கள் நகைச்சுவையோடு குடும்பங்களும் ,குழந்தைகளும் கொண்டாடும் வகையில் வெளியாகி ஹிட் அடித்த படங்கள் . அரண்மனை முதல் இரண்டாம் பாகங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு  தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா, ராஷிக்கண்ணா நடிப்பில் அரண்மனை 3  திரைப்படம்  உருவாக்கப்பட்டு ரிலீஸுக்கு தயாராகி உள்ளது. அவ்னி  சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரிக்க C.சத்யா  இசையமைக்கிறார்.

அரண்மனை மூன்றாம் பாகம் முதல் இரண்டு பாகங்களை விட மிகப்பிரமாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது .ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந்தர்.சி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க,விவேக், யோகி பாபு, ஆண்ட்ரியா ,மனோபாலா,சம்பத், சாக்‌ஷி அகர்வால், மதுசூதன ராவ், வின்சென்ட் அசோகன், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் , இரண்டாவது பாடலான ‘ரசவாச்சியே’ இன்று வெளியாகி உள்ளது .

தனது பின்னை குரல் மூலம்ரசிகர்களை வசீகரிக்கும் மயக்கும் குரலுக்கு சொந்தக்காரரான  சித் ஸ்ரீராம் இந்த பாடலை பாடியுள்ளார் .மோகன் ராஜன் பாடல் வரிகளை எழுதியுள்ளார் .

Song link – https://youtu.be/UT3_k2I9qDU

தொழில்நுட்ப கலைஞர்கள்:
இயக்கம்  : சுந்தர் .சி
தயாரிப்பு நிறுவனம் : அவ்னி சினிமேக்ஸ்
தயாரிப்பாளர் : குஷ்பு சுந்தர்
ஒளிப்பதிவு : UK செந்தில்குமார்
இசை : C சத்யா
படத்தொகுப்பு : ஃபென்னி ஆலிவர்
கலை இயக்கம் : குருராஜ்
சண்டை பயிற்சி : பீட்டர் ஹெய்ன்,தளபதி தினேஷ் ,பிரதீப் தினேஷ்
நடனம்:பிருந்தா,தினேஷ்
மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அஹ்மத்

 
 
பாடல் வரிகள்

பல்லவி

ரசவாச்சியே
ரசவாச்சியே
உன் பார்வையால போனேன் கூசியே

விழி  சாய்ச்சியே
விழி  சாய்ச்சியே
நீ பேசும் போது ஆவேன் தூசியே

பாவாட சட்டையில நான் பாத்த நேரம் எல்லாம்
பாலாட  பால போல தழும்புவேன்டி

நீ கடிச்ச மிட்டாய் வாங்கி நான் ருசிச்ச காலம் எல்லாம்
நெஞ்சோரம் இன்னும் கூட நெனைக்குறேன்டி
—————————–———–
ரசவாச்சியே விழி சாய்ச்சியே ரசவாச்சியே
………………………
சரணம்  

ஆளான  நேரத்தில்
வெட்கப்படும்  உன்  கண்ணு
அந்த நேரம் நீ போட்ட உன்  வளையல் ஆளி சேர்த்தேன்

தெனம் காலாற உன்கூட
சேர்ந்து  வர நெனப்பேனே
அப்போயெல்லாம் உன் நிழலில் என் நிழலை
தொட்டு  பாப்பேன் …

ஒரு ரிப்பன் போல தான் சுத்தி கெடக்குறேன் உன் மேல நானே
நீ பாரு அது போதும் நான் வாழுவேன்

ரசவாச்சியே  ரசவாச்சியே விழிசாய்ச்சியே

பாவாட சட்டையில நான் பாத்த நேரம் எல்லாம்
பாலாட பால போல தழும்புவேன்டி

நீ கடிச்ச மிட்டாய் வாங்கி நான் ருசிச்ச காலம் எல்லாம்
நெஞ்சோரம் இன்னும் கூட நெனைக்குறேன்டி

ரசவாச்சியே  ரசவாச்சியே ரசவாச்சியே ரசவாச்சியே
ரசவாச்சியே  விழி  சாய்ச்சியே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *