ஆரி அர்ஜுனன் நடிக்கும் “பகவான்” படப்பிடிப்புக்காக பிரமாண்ட பாடல் காட்சி படமாக்கப்பட்டது!
பிக்பாஸ் மூலம் மக்களின் இதயங்களை வென்ற நடிகர் ஆரி அர்ஜுனன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் பகவான் திரைப்படத்திற்காக மிகப்பிரமாண்டமான பாடல் காட்சி கலா மாஸ்டர் நடன அமைப்பில் படமாக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் காளிங்கன் இயக்கத்தில் AMMANYA MOVIES சார்பில் C.V. மஞ்சுநாதா தயாரிக்கும் திரைப்படம் “பகவான்” மித்தாலஜிகல் திரில்லர் வகையில் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் மக்களின் நாயகன் ஆரி அர்ஜுனன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியானபோதே பெரும் வரவேற்பை பெற்றது. இதுவரையிலும் தோன்றியிராத வகையில் வித்தியாசமான தோற்றத்தில் இப்படத்தில் ஆரி அர்ஜுனன் நடித்திருக்கிறார். ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும் பரபர திரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்திற்காக கலா மாஸ்டர் நடன அமைப்பில், மிகப்பிரமாண்ட பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இப்பாடலுகென்றே 3 நாட்கள் பிரத்யேகமாக பயிற்சிகள் எடுத்துகொண்டு பாடல் காட்சியில் பங்கேற்றுள்ளார் நடிகர் ஆரி அர்ஜீனன். ஆங்கில நடிகர் ஜேம்ஸ் பாரட் வில்லனாக நடிக்க, படத்தின் சண்டை காட்சிகள் ரசிகர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் தீபாவளிக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இப்படத்தில் ஆரி அர்ஜுனன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ‘ரங்கஸ்தலம்’ படத்தின் நாயகி பூஜிதா பொன்னாடா நடிக்கிறார். இவர்களுடன் ஜெகன், முருகதாஸ், யோக் ஜேபி, சம்பத் ராம், லக்கி நாராயணன், அலெக்ஸ், அபிஷேக், சத்யா, “மாஸ்டர்” பாண்டி, அஜய் தத்தா ஆகியோர் முக்கியபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சிறப்பு தோற்றத்தில் கோப்ரா படத்தில் நடிக்கும் ஆங்கில நடிகர் ஜேம்ஸ் பாரட் வில்னாக நடிக்கிறார்.
தொழில் நுட்ப குழுவினர் விபரம்
இயக்கம் – காளிங்கன்
ஒளிப்பதிவு – முருகன் சரவணன்
இசை – பிரசன் பாலா
படத்தொகுப்பு – அதுல் விஜய்
நடன அமைப்பு – கலா மாஸ்டர்
ஸ்டண்ட் – ஹரி தினேஷ்
பாடல்கள் – சம்பத் G
உடை வடிவமைப்பு – வினயா தேவ்
ஸ்டில்ஸ் – மணிகண்டன்
லைன் புரடியூசர் – முருகன் சரவணன்
இணை தயாரிப்பு – V. ஶ்ரீனிவாசா