நக்கலைட்ஸ் குழுவின் ALUMBUNATIES-2 எப்போது வெளியாகிறது தெரியுமா?

யூட்யூப் தளத்தில் புதிய சிந்தனைகளுடனும், இயல்பான கதைக்களத்துடனும் மக்களை கவர்ந்து தன் வசம் வைத்துள்ள யூட்யூப் சேனல் தான் நக்கலைட்ஸ். Back to School, அம்முச்சி, ALUMBUNATIES என இவர்கள் வெளியிட்ட அனைத்து தொடர்களும் வயது வரம்பு இல்லாமல் அனைத்து தரப்பு மக்களிடமும் மாபெரும் வெற்றியடைந்து சீசன் 2க்கான எதிர்பார்ப்பை தூண்டியது.

இதனை தொடர்ந்து Back to School – 2 யூட்யூப் தளத்தில் வெளியாகி லட்சக்கணக்கான வியூஸ்களை கடந்தது. தற்போது, அம்முச்சி-2 AHA தமிழ் ஓடிடி தளத்தில் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால், மக்களின் அதிக எதிர்பார்ப்பை கொண்ட ALUMBUNATIES-2 பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லாத நிலையில். ALUMBUNATIES-2 தொடர் SONY Liv தளத்தில் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. யூட்யூப் தளத்தில் மட்டுமல்லாமல் தற்போது ஓடிடி தளத்திலும் நக்கலைட்ஸ் குழு பல சாதனைகள் படைக்குமென்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

அம்முச்சி – 2 திரைவிமர்சனம் படிக்க கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://ilanchoorian.com/ammuchi-2-review-in-tamil/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *