ஆரம்பகட்டத்தில் சென்னையிலுள்ள கையேந்தி பவன் முதல் ஸ்டார் ஹோட்டல் வரை அங்குள்ள உணவை சாப்பிட்டு ரிவ்யூ செய்தவர் இர்பான். சிக்கன், மட்டன், பீப், மீன், இறால் என சாப்பிட்டு வந்த இர்பான். துபாய், தாய்லாந்து, மலேசியா என பலநாடுகளுக்கு சென்று தவளை, பாம்பு முதல் ஒட்டகம், முதலை வரை சாப்பிட்டு ரிவ்யூ செய்து வியூஸை அள்ளினார்.
பின்பு சொகுசு கார், அட்டகாசமான வீடு என அவர் ஆசைப்பட்ட அனைத்தையும் அடைந்துவிட்டார் என்றே சொல்லலாம்.
ஆரம்பத்தில் காசு கொடுத்து சாப்பிட்டு ரிவ்யூ செய்த இவரை காலப்போக்கில் உணவக உரிமையாளர்கள் காசு கொடுத்து அழைத்து ரிவ்யூ செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். அதற்கு ரூ.40,000/- முதல் ரூ.1 லட்சம் வரை வசூல் செய்து ரிவ்யூ செய்தும் வந்தார் யூட்யூப் புகழ் இர்பான்.
சமீபத்தில் இர்பான் ரிவ்யூ செய்த ஹோட்டல் தான் சென்னை அண்ணாநகரில் உள்ள “ரோஸ் வாடர்”. அந்த உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் இறால் ஆர்டர் செய்துள்ளார். அப்போது அவருக்கு வழங்கப்பட்ட இறாலில் அழுகிய துர்நாற்றம் வீசியதனால் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகளுக்கு அவர் புகார் செய்துள்ளார்.
அங்கு சோதனை செய்த அதிகாரிகள் கிட்டத்தட்ட 10 கிலோவுக்கு மேலான இறால், 40 கிலோ சிக்கன் அழுகிய நிலையில் இருந்ததை கண்டெடுத்து அந்த உணவகத்திற்கு சீல் வைத்துள்ளனர்.
இதை கண்ட நெட்டிசன்கள், ஓசியில் கிடைத்தால் எதை வேண்டுமானாலும் ரிவ்யூ செய்வாரா இர்பான் என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சமீபத்தில், இர்பானுக்கு சம்பந்தமே இல்லாத கார் ரிவ்யூவையும் செய்து வருகிறார் என்பதும் நெட்டிசன்களை கடுப்பேத்தி வருகிறது.