(AK63)அஜித்தை மீண்டும் இயக்கும் சிவா! அஜித்தின் ஒற்றை வார்த்தைக்காக காத்திருக்கும் தயாரிப்பு நிறுவனம்?!

நடிகர் அஜித் குமாரின் அடுத்தடுத்த படங்களின் அப்டேட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. இது ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்த செய்கிறது.

AK61, AK62, AK63 என பெயரிடாமல் அப்டேட்டுகள் வந்த வண்ணம் உள்ளது.

AK63 படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் தகவல்கள் கசிந்து வருகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் அஜித்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறார்களாம். பொதுவாக அஜித் படத்தின் இசை வெளியீட்டு விழா, பத்திரிகையாளர்கள் சந்திப்பு, படத்தின் ப்ரோமோஷன் போன்ற எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள விரும்ப மாட்டார். அதற்கு உடன்படுபவர்களுடன் மட்டும் தான் பணியாற்றுவார். ஆகையால், அஜித்தின் இந்த கண்டிசன்களுக்கு ஒப்புக்கொண்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் அஜித் ஓகே சொன்னால் அதிகாரப் பூர்வ தகவலை வெளியிடத் தயாராக இருக்கிறார்கள் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *