வலுவிழந்த வலிமை

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆனது நடிகர் அஜித் குமார் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படம் வெளியாகி, ஹிந்தியில் ‘பிங்க்’ என்ற படத்தை ரீமேக் செய்த போனி கபூர் மற்றும் இயக்குனர் H.வினோத் அந்த படம் ஒரு ரீமேக் படம் தான் என்பது போல் இல்லாத அளவிற்கு காட்சி படுத்தி மிகப்பெரிய ஹிட் அடிக்க செய்தனர்.

அதே படக்குழு மீண்டும் ஒன்றாக இனைந்து ‘வலிமை’ படத்தை உருவாக்கியது, படப்பிடிப்பு ஆரம்பித்த உடனே படபடப்பான அஜித் குமார் ரசிகர்கள் படத்தை பற்றிய அப்டேட்காக கிட்ட தட்ட 1 வருடம் காத்திருந்தனர், அதே சமயம் காரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு போட்ட நிலையில் படப்பிடிப்பும் பாதியில் நின்றது, அப்டேடும் வரவில்லை.

இதனால் ஆத்திரமடைங்க ரசிகர்கள் அப்டேட் கேட்டு ட்விட்டர்,பேஸ் புக் போன்ற வலயத்தளங்கள் மட்டுமல்லாமல், கிரிக்கெட் மைதானம், கால் பந்து மைதானம் என்று ஒன்றையும் விட்டு வைக்கவில்லை.

மனமிரங்கிய படக்குழுவும் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக், பாடல் என வெளியிட்டு ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிவிட்டனர்.

தீபாவளி அன்றே வெளியாகும் என எதிர்பார்த்த இப்படம் ஒரு சில காரணத்தால் தள்ளி போனது.

ஒரு வழியாக பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு வெளியாகும் என தேதி வெளியிட்டு படத்திற்கான விளம்பர வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில், மீண்டும் கரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க பட்ட நிலையில் படம் மீண்டும் ரிலீசுக்கு தள்ளிபோடப்பட்டுள்ளது.

இது ரசிகர்களின் இடையே பெரும் சோகத்தையும் அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *