சந்தானம் நடிப்பில், லாபிரிந் பிலிம்ஸ் நிறுவனம் வழங்கும் படம் “AGENT கண்ணாயிரம்”. யுவன் ஷங்கர் ராஜா இசையில் மனோஜ் பீதா இயக்கியுள்ளார்.
AGENT கண்ணாயிரம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில், சந்தானம், ரியா சுமன்,ராமதாஸ், புகழ், மனோஜ் பீதா கலந்துக் கொண்டனர்.
ரியா சுமன், தமிழில் இது என்னுடைய 3வது படம். நான் ஆவணப்பட இயக்குனராக இப்படத்தில் நடித்துள்ளேன். சந்தானம் சாருடன் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. இப்படி ஒரு பாத்திரத்தில் சந்தானம் இதுவரை நடித்ததில்லை. ஆதிரா விக்டர் என்பது என் கதாபாத்திர பெயர், இந்த கதாபாத்திரத்தை தந்ததற்கு மனோஜ் சாருக்கு நன்றி.
மிகக் கடினமான இடங்களில் AGENT கண்ணாயிரம் படமாக்கப்பட்டது. அனைவரும் இப்படத்தை ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன், என்றார்.
மனோஜ் பீதா, சந்தானம் சார் அவரின் வாழ்க்கையில் நிறைய பாத்திரங்களில் நடித்துள்ளார். நானும் சிறு வயதிலிருந்து அவரை ரசித்து வருகிறேன். ஆனால், இதுவரை அவர் செய்திராத ஒரு பாத்திரத்தை அவருக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதே போல், எனக்கு எது வருமோ. அதை தான் நான் தைரியமாக செய்வேன்.
“குலுகுலு” படத்தை பார்த்தபின் எனக்கு பொறாமையாக இருந்தது. சந்தானம் சாரின் கதாபாத்திரத்தை முதலில் நான் தான் மாற்றியமைக்க வேண்டும் என்று நினைத்தேன். அதை நான் தான் முதலில் செய்தேன். ஆனால், போஸ்ட் புரொடக்சன் வேலைகள் முடிய அதிக நாட்கள் தேவைப்பட்டது. அந்த காரணத்தால் முதலில் “குலுகுலு” ரிலீஸ் ஆகிவிட்டது. அப்படம் முதலில் ரிலீஸ் ஆனதால் ரத்னகுமாருக்கு சந்தானம் சாரை மாற்றியமைத்த புகழ் ரத்னகுமாருக்கு சென்றடைந்தது.
சந்தானம், என் படம் என்றாலே காமெடி படம் என்று தான் எதிர்ப் பார்க்கிறார்கள். அதை மாற்றியமைப்பது கடினமான ஒரு வேலை. அதை தான் இயக்குனர் ரத்னகுமாரும் சொன்னார்.
ஆனால், இப்படத்தில் என்னை காமெடியே செய்ய விடவில்லை. நாங்கள் ஒத்திகை செய்யும் போது அதை படம் பிடித்துப்பிடுவார். நடிக்கும் போது அதை வேண்டாம் என சொல்லிவிடுவார். என்னை மனோஜ் நடிக்க விடவே இல்லை என்பது தான் உண்மை. மனோஜுடன் வேலை பார்த்தது புதிய அனுபவம்.
யுவன் சங்கர் ராஜாவுக்கு மிக்க நன்றி. அவரின் இசை பலப்படங்களை தூக்கி நிறுத்தியுள்ளது. பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது.
புகழ்-சந்தானம் படம் பயங்கர காமெடியாக இருக்கும் என்று எதிர்பார்த்து வராமல் ஒரு கமெர்சியல் படமாக பாருங்கள். நன்றி என்றார்.