தங்கர் பச்சான் இயக்கத்தில் அதிதி பாலன். “கருமேகங்கள் கலைகின்றன” படபிடிப்பு தீவிரம்.

 

தங்கர் பச்சானின் படைப்புகள் வாழ்வியலை மையமாகக் கொண்ட கதைகளாகவே இருக்கும். தற்பொழுது உருவாகிக் கொண்டிருக்கும் ‘கருமேகங்கள் கலைகின்றன’ கதையும் அவருடைய முந்தைய படங்களைப் போல் அவர் எழுதிய சிறுகதையினை அடிப்படையாகக் கொண்டதுதான். பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் வாசுதேவ் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் போன்றோர் நடிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதிக்குமேல் முடிந்துவிட்டது.
தற்பொழுது இப்படத்தின் மைய பெண் பாத்திரத்தில் #அருவி புகழ் அதிதி பாலன் நடிக்கிறார்.

இக்கதையின் ஆணி வேரான இப்பாத்திரத்தில் நடிக்க இந்தியாவின் அனைத்து மொழிகளிலிருந்தும் நடிகையைத் தேர்வு செய்ததில் இறுதியாக அதிதி பாலன் மிகவும் பொருத்தமாக அமைந்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சவாலான இப்பாத்திரத்தில் தனது மெருகேறிய நடிப்பின் மூலம் படைப்புக்கு வலுவூட்டுவார் என நம்புகிறேன்.”
கதையின் வலுவான ஆழமான பாத்திரத்தில் அதிதி பாலன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது குறித்து இயக்குநர் தங்கர் பச்சான் இவ்வாறு கூறினார்.

பாரதிராஜா உடல் நிலை சரியாகி இப்பொழுது சென்னையில் படபிடிப்பு நடை பெற்றுவருகிறது. 20ம் தேதி முதல் இராமேஸ்வரத்தில் படபிடிப்பு தொடர்ந்து நடைபெற்று முடிவடைகிறது.

*Cast* :-
Bharathi Raja
Aditi Menon
Gowtham Menon
Yogi Babu
Mahana sanjeevi
SA Chandra Sekhar
RV Udhya Kumar
Prymid Natrajan
Delhi Ganeshan

*Technicans :-*
Director: Thangar Bachan
Music: GV.Prakash
Lyrics: Vairamuthu
Cinematographer: N.K.Ekhambaram
Art director:Michael
Set Design: Muthuraj
Executive Producer: Varagan
PRO : Johnson
Production: VAU media entertainment
Producer: D.Veerasakthi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *