THINK ORIGINALS வழங்கும் , அஷ்வின் குமார் லக்ஷ்மிகாந்தன் & ‘தியா’ பட புகழ் குஷி ரவி கலக்கும் “அடிபொலி” பாடல்.
Think originals நிறுவனம் தொடர்ந்து திரைப்பட இசை அல்லாத, வெற்றிகரமான சுயாதீன இசை ஆல்பங்களை வெளியிட்டு, ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. அந்த வகையில் ஓணம் திருநாள் கொண்டாட்டமாக, மலையாளத் திரைத்துறையின் பன்முக திறமை கொண்ட நடிகர் இயக்குநர் வினித் சீனிவாசன் மற்றும் சிவாங்கி கிரிஷ் குரலில் அற்புதமான “அடிபொலி” பாடலை வெளியிட்டுள்ளது. மலையாளத்திரையின் உச்ச நட்சத்திரமான மோகன்லால் அவர்கள், இப்பாடலின் இணைய ஸ்ட்ரீமிங் லிங்கை தனது வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட நொடியில், இப்பாடல் இணையத்தில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. வெளியான நாள் முதல் இசை ரசிகர்களின் நெஞ்சங்களை வென்று, பெரு வெற்றியை பெற்றுள்ளது. இந்த பாடல் தற்போது YouTube இல் 12 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று, YouTube Trending No1 உள்ளது. மேலும் #Adipoli இணையத்தில் வைரலாகி வருகிறது. சித்து குமார் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு விக்னேஷ் ராமகிருஷ்ணா பாடல் வரிகள் தந்துள்ளார். வினித் சீனிவாசன் & சிவாங்கி கிரிஷ் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர். பல்துறை வித்தகரான ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார் மற்றும் தமிழ் குமரன் எடிட்டிங்கை கையாண்டுள்ளார். ஷெரீப் நடனம் அமைத்துள்ளார், பிரேம் கிருஷ்ணா கலை இயக்கம் செய்துள்ளார்.
நடிகர் அஸ்வினுக்காக சிவாங்கி அதிகாரப்பூர்வமாக ஒரு பாடலை பாடியுள்ளது இதுவே முதல் முறையாகும், இது ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. வினீத் சீனிவாசன், ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், டான்ஸ் மாஸ்டர் ஷெரீப் போன்ற பல பெரிய ஆளுமைகளின் பங்களிப்பால் இப்பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அஷ்வின், பாடலாசிரியர் விக்னேஷ் மற்றும் இசையமைப்பாளர் சித்து குமார் ஆகியோர் அடங்கிய குழு ஏற்கனவே ‘கண்ண வீசி’ பாடலின் மூலம் பெரும் வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. அவர்கள் கூட்டணியில் இந்த புதிய பாடலும் வெற்றியை பெற்றுள்ளது. மேலும் ‘தியா’ படம் மூலம் இளம் உள்ளங்களை கவர்ந்த, அழகு தேவதை குஷி ரவியின் பங்களிப்பு, பாடலுக்கு கூடுதல் அழகை தந்துள்ளது.
இந்த பாடலின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, Think originals விரைவில் அதன் அடுத்த பரபரப்பான சுயாதீன ஆல்பம் பாடலை வெளியிடவுள்ளது. புதிய ஆல்பம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.